அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத தமிழக வழக்கறிஞர்கள்1,025 பேர் இடைநீக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2017

அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத தமிழக வழக்கறிஞர்கள்1,025 பேர் இடைநீக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை

அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் வழக்கறிஞர்களுக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 தமிழக வழக்கறிஞர்களைஇடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜ்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அகில இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டன. இதன்படி அகில இந்திய பார் கவுன்சில் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

புதிதாகபதிவு செய்யும் வழக்கறிஞர்கள், 2 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வழக்கறிஞர்களாக பதிவு செய்த 1,025 பேர் இன்னும் இந்த அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.எனவே இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களாக தொழில் புரியக்கூடாது என இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை மீறி அவர்கள் நீதிமன்றங்களிலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ வழக்கறிஞர்களாக ஆஜராகினால் எவ்வித முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக அவர்களது வழக்கறிஞர் பதிவு நீக்கப்படும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி