தமிழகம் முழுவதும் 25 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2017

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள்திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த 13ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக 100 மையங்களை தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அரசு தரப்பில் கேட்டுக்ெகாள்ளப்பட்டது.

 இதற்காக, தமிழக அரசு தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 73 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக பதிவு செய்தனர்.அதன்படி முதற்கட்டமாக 25 மையங்களில் இணையதளத்துடன் கூடிய கணினிகள் பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்தபடியேஇணையதளம் வழியாக புரஜெக்டர் திரை மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. சென்னையில் எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி