ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு நடத்தும் டிச. 7 உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு நடத்தும் டிச. 7 உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்பு

ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் அதன் மாநில தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும்.

6-வது ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்டுள்ள 2009-க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 7-வது ஊதியக் குழுவில் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும்.23.8.2010-க்குப் பிறகு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய்ரகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 7-ம்தேதி மாவட்ட தலைநகரங்களிலும் ஜனவரி 6-ம் தேதி மாநில அளவிலும் நடைபெறும் உண்ணாவிரதப்போராட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில துணை தலைவர்கள் மணி, மைதிலி, துணைச் செயலாளர்கள் அருள்ராஜன், கில்டா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி