பிஎஸ்என்எல் பிளான் - 97 திட்டம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2017

பிஎஸ்என்எல் பிளான் - 97 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் சிம்முடன் இணைந்த மைக்ரோமேக்ஸ் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிளான்-97 என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97 கட்டணத்தில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்வதோடு, 5 ஜிபி வரை டேட்டாவும் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம், மைக்ரோமேக்ஸ் இணைந்து ‘பாரத்1’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.2,200 கட்டணம் செலுத்தினால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்போன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டு வழங்கப்படும். இந்த செல்போன் இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளான் - 97 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97-க்கு ரீசார்ஜ் செய்தால் அனைத்து நெட்வொரக் செல்போனுக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன், வேகக் கட்டுப்பாடின்றி 5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி