ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2017

ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை!


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மொபைல் போன் விற்பனையைஇரண்டாம் கட்டமாக மீண்டும் தொடங்கியுள்ளது.ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவில்,
புதிய மொபைல்போன்களின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து நிறுவனங்களின் பார்வையும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத 50 கோடி பேரின் மீதே உள்ளது. இந்நிலையில் 3ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாற்றும் முயற்சியின் முதல் கட்டமாக ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி பீச்சர் போனை அறிமுகப்படுத்தி, இதுவரை 60 லட்சம் வரையிலான போன்களை விற்றுவிட்டது. இந்தச் சலுகை அறிவித்த இரண்டே நாட்களில் அதிக முன்பதிவின் காரணமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று முன்பதிவு நிறுத்தப்பட்டது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, நவம்பர் 26 முதல் இந்தப் போன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பப்பட்டு, அருகிலுள்ள விற்பனை மையங்களில் போன்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி சலுகைக்குப் போட்டியாகச் சந்தையில் மற்ற நிறுவனங்களும் 4ஜி பீச்சர் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளன. அந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனம் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2000க்கும் குறைவான மொபைல் தயாரிப்பில்ஈடுபட்டு வருகிறது. வோடஃபோன் நிறுவனம், மைக்ரோமேக்ஸ்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 மதிப்பிலான போனை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி