புதிய வரைவு பாடத்திட்டம் முதல்வர் வெளியிட்டார்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

புதிய வரைவு பாடத்திட்டம் முதல்வர் வெளியிட்டார்!!


ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய பாடத்திற்கான வரைவை முதல்வர் பழனிச்சாமி இன்று (நவம்பர் 20) வெளியிட்டார். 
தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் 2018 ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட வரைவு www.tnscert.org என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கலாம் என பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி