Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கனமழை - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு, 8:00 மணி முதல், ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.
மழை காரணமாக நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில் விடியவிடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.மேலும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

7 comments

 1. 1114 பட்டதாரி பணியிடங்களில் DSE க்கு தேர்ந்தெடுக்கபட்ட 194 நபருக்கு இந்த வாரம் கலந்தாய்வு நடத்தபட வாய்ப்பு??????


  1114 பணியிடங்களில் மீதமுள்ள 600+ இடங்களுக்கு புதிய Weightage முறையே பின்பற்றபடலாம்.

  NEW WEIGHTAGE GO வந்த வந்தால் பழைய GO.71 நீக்கப்படும்.

  புதிய WEIGHTAGE மூலம் 600+ பின்னடைவு பணியிடங்களும்,புதிய காலி பணியிடங்களும் 2013,2013,2017 தேர்வர்களை கொண்டு நிரப்பபடும்.

  பழைய WEIGHTAGE ஒழிந்து புதிய WEIGHTAGE வரட்டும்

  ReplyDelete
  Replies
  1. *2012,2013,2014 மற்றும் 2017
   தேர்வர்களை கொண்டு நிரப்பபடும்

   Delete
  2. புதிய வெயிட்டேஜ் முறை கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டும்.
   ஆனால் அது 1114 ல் மீதமுள்ள 600 +க்கு பொருந்தாது.
   ஏனெனில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்தோர் தவறுதலாக மதிப்பெண் % ஓடிவிட்டதால் 1114 இல்லாமல் போனது.

   Delete
  3. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கபட்டவர்களில் 110 க்கும் மேற்பட்டோர்களை CV யின் போது Reject செய்தார்கள்.இதில் சிலர் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.


   நிராகரிக்கப்பட்ட 110+ நபர்களுக்கு பதிலாக பழைய Weightage முறைப்படி திரும்பவும் 2013 Tet லிருந்து இரண்டாம் பட்டியல் வெளியிடப்படலாம்.இது வழக்கின் முடிவை பொறுத்தே இருக்கும்

   ஆனால் 600+ பணியிடங்களுக்கு 2013 Tet ல் ஆட்கள் இல்லை.2017 Tet ல் இருந்துதான் தேர்ந்தெடுக்க படுவார்கள்.இந்த 600+ Geo,Bot மற்றும் ST COMMUNITY VACANT.இதற்கு 2013 ஆட்கள் இல்லாததால் பின்னடைவு பணியிடங்களாக கருதி 2017 VACANT உடன் சேர்க்கப்படும்.

   2017 TET க்கு NEW GO வை பயன்படுத்தியே காலியிடங்கள் நிரப்படும்.

   2017 க்கு பழைய மற்றும் புதிய GO என இரண்டு GO பயன்படுத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

   Delete
  4. வழக்கு இல்லை.

   Delete
 2. Kanna sir send ur mobile num sankarapandiyan 2013@gmail.com

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல

  உதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது..,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives