அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும், ஆனால், கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்று தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகம், கடற்கரைப்பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.ஆதலால், வரும் வாரத்தில் வெளியே செல்லும் போது 'குடை' அல்லது 'ரெயின்கோட்' உடன் எடுத்துச் செல்லவும்.

கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.கடந்த வாரத்துக்கு முன் பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த முறை டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்யக்கூடும்.திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் அடுத்தநான்கு நாட்கள் வரை மழை இருக்கும்.

மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்யும்.வடகடலோர மாவட்டங்களாகன சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை இருக்கும். உள்மாவட்டங்களிலும் ஒரு சில நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு உண்டு. வடக்கு உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலும் ஒரிருமுறை மழை இருக்கும்.மிதமான மழைமட்டுமே இருக்குமே என்பதால், வெள்ளத்துக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்… இந்த மழை என்பது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்யாது. அடுத்த 4 நாட்களில் வெள்ளம் வரும் அளவுக்கும் மழை பெய்யப் போவதில்லை. ஆதலால், மழையை அனுபவியுங்கள்.

வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துவிடும். ஆதலால், இந்த மாதத்தின் கடைசி நாட்களும், டிசம்பர் மாதத்தின் முதல்பாதியும் மழையோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம். சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் மழையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதால், நல்ல மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி