ஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

ஆதார் பதிவு இயந்திரங்கள் வங்கிகள் வாங்க அனுமதி

நாடு முழுவதும், 10 சதவீத வங்கிகளில், ஆதார் பதிவு பணிகளுக்கான இயந்திரங்களை வாங்கவும், 'டேட்டா என்ட்ரி' வேலைகளுக்கு, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஆதார் பதிவு, திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனங்கள் மூலம், ஆதார் அடையாள அட்டை ஆணையம் நிறைவேற்றி வந்தது.

உத்தரவு : தற்போது, 100 கோடி பேருக்கு மேல், ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதால், ஆதார் பதிவு பணிகளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 சதவீத கிளைகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு வசதியாக, வங்கிகள் தக்க ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் பதிவு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள, இயந்திரங்களை கொள்முதல் செய்யவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களாக, வெளிநபர்களை பணியமர்த்திக் கொள்ளவும், வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

பதிவு மையம்இதனால், வங்கிகளின், 10 சதவீத கிளைகளில், விரைவில், ஆதார் பதிவு மையங்கள் திறக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.ஆதார் பதிவு மற்றும் திருத்தல் பணிகளை முறையாக மேற்பார்வை இடும்படி, வங்கி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும், 3,000 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி கிளைகளில் மட்டுமே, ஆதார் பதிவு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், 15,300 மையங்கள் துவக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தவறுதலாக வெளியானதகவல்கள்சிலரது பெயர், முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை, மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த, 200 இணையதளங்கள், தவறுதலாக வெளியிட்டுள்ளதுதெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆதார் அடையாள அட்டை ஆணையம் அளித்த பதிலில், இந்த தகவல் அம்பலமாகி உள்ளது. சில தனிநபர்களின் தகவல்கள், தவறுதலாக, மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்களில் வெளியானதாகவும், அவை நீக்கப்பட்டு விட்டதாகவும், ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி