பகுதிநேர ஆசிரியர்களுக்கு அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2017

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அழைப்பு

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தமிழகஅரசு ஏற்று அரசாணை 303 11.10.2017ல்வெளியிட்டதுஇதில் பகுதிநேர தொகுப்பூதியதிட்ட வேலையில் உள்ளவர்களுக்கும் 30%ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதுஇதில்பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கம்மூலம் பணிபுரியும் 16549 பகுதிநேரஆசிரியர்களும் பயனடைகின்றனர்.
 இதற்காகபகுதிநேர ஆசிரியர்களின் சார்பில் தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு மூலம் மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகடிதம் அனுப்பப்பட்டுள்ளதுஏற்கனவே ஜீன்2ல் ஏழாவது ஊதிய மாற்று அலுவலர் குழுகூட்டத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்றப்பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்கள் கலந்துகொண்டு 16549 பகுதிநேரஆசிரியர்களுக்கு அனைத்துவேலைநாட்களிலும் பணிவழங்கிகுறைந்தபட்ச சம்பளமாக ரூ.18000 நிர்ணயித்துசிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திடகேட்டுக்கொண்டார்ஊதியக்குழுவும் அரசிடம்பரிந்துரைப்பாக உறுதியளித்ததுஇருப்பினும்தற்போதைய 30% ஊதிய உயர்வால் ரூ.7700தொகுப்பூதியத்தில் இருந்து ரூ.10600 பகுதிநேர ஆசிரியர்களின் புதியதொகுப்பூதியமாக உயருகிறது.நிலுவைத்தொகையும் 01.01.2016 முதல்கிடைக்கும்இதனால் ஊதிய உயர்வுக்குதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கடலூரில்22.10.2017ல் அனைத்து ஆசிரியர் முன்னேற்றப்பேரவை தலைவர் மற்றும் ஆசிரியர்சங்கங்களின் கூட்டமைப்புஒருங்கிணைப்பாளர் (டேக்டோ)திரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்களின்தலைமையில் பகுதிநேர ஆசிரியர்களின்மாநிலமாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்கூட்டம் நடைபெற்றது

24.10.2017 மற்றும்25.10.2017ல் மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் அவர்களை டேக்டோஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்கள் முன்னிலையில் பகுதிநேரஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன்சந்திந்தபோது 30% ஊதிய உயர்வு பகுதிநேரஆசிரியர்களுக்கு பெற்றுத்தர சம்மதித்தார்.மேலும் பணிமாறுதல் விரும்புவோருக்குபட்டியல் பெற்று தந்தால் உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகுபள்ளிக்கல்வி அமைச்சர் கூறினார்.அதைப்போலவே அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள்,இணை இயக்குநர் அவர்களையும் சந்தித்துபகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம்ஊதியம் பெற்று வழங்க (டேக்டோஆசிரியர்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவலியுறுத்தப்பட்டது.

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைசந்திக்க  2.11.2017ல் (டேக்டோஆசிரியர்சங்கங்களின் கூட்டமைப்பிற்கு நேரம்ஒதுக்கப்பட்டிருந்ததுமாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களை சந்தித்தபோது பகுதிநேரஆசிரியர்களுக்கு சிறப்பு காலமுறைஊதியத்தில் பணியமர்த்த கோரிக்கைமனுவில் வலியுறுத்தப்பட்டதுமாண்புமிகுதமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்கபகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியநான் மற்றும் திருவள்ளூர் ரமேஷ் அவர்களும், (டேக்டோஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புநிர்வாகிகளுடன் கலந்து கொள்ளும் அரியவாய்ப்பு கிடைத்தது.

 பகுதிநேரஆசிரியர்களின் நலன் காக்க அனைத்துவழிகளிலும் முன்னேறி செல்லும்போதுவீணான சந்தேகங்களை எழுப்பி,குழப்பங்களை ஏற்படுத்திவாய்ப்புகளைவீணாக்க சில விஷமிகள் போராட்ட உணர்வைதூண்டுகிறார்கள்முறையிட்டு கேட்டுபெறக்கூடிய கோரிக்கைகளையும்போராடினால் மட்டுமே கிடைக்கும் என விஷமஎண்ணத்தை பரப்பி வருகிறார்கள்எனவேபோராட்டத்தால்கிடைக்க இருக்கின்றபொன்னான வாய்ப்புகளை பகுதிநேரஆசிரியர்கள் இனியும் இழந்திடக்கூடாதுஎன்பதனை அனைவருக்கும்நினைவூட்டுகிறேன்எனவே அனைத்துபகுதிநேர ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன்இருந்து நல்ல செயல்திட்டங்களோடும்,செயல்பாடுகளோடும் தொடர்ந்து நல்வழியில்செல்லும் எனது வழியில் இணைந்துசெயல்பட அழைக்கிறேன்கோரிக்கைகளைஅரசிடம் கேட்க வேண்டிய முறையில் கேட்டுபெறுவோம்ஜாக்டோ ஜியா அமைப்புகூடஇரண்டாக உடைந்து ஜாக்டோஜியா கிராப்அமைப்பு கோரிக்கைகளை வெல்ல அரசைஆதரிக்கிறதுமேலும் CPS ஒழிக்க CPSஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டு மாண்புமிகுதமிழக முதல்வரை சிறப்பு அழைப்பாளராகஅழைக்கின்றனர்மிகப்பெரிய அமைப்பேகோரிக்கையை வெல்ல மாநாடு நடத்ததிட்டமிடும்போது பகுதிநேர ஆசிரியர்களும்தொகுப்பூதிய வேலை ஒழிப்பு மாநாடு நடத்திஏன் கோரிக்கையை வெல்லக்கூடாது என்றமாற்று சிந்தனையை வளர்க்க மீண்டும்மீண்டும் அழைக்கிறேன்ஊதிய உயர்வு,பணிமாறுதல்மே மாதம் ஊதியம் மற்றும்சிறப்பு காலமுறை என அனைத்தையும்பகுதிநேர ஆசிரியர்கள் பெற்று நல்லநிலையை அடைய கோரிக்கைகளைமுன்வைத்து பணி பாதுகாப்புடன்அமைதிவழியே - அறவழி என்னும் உன்னத வழியில்ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து களப்பணிஆற்ற மீண்டும் மீண்டும் அழைக்கிறேன்.

சி.செந்தில்குமார்செல் 9487257203மாநிலஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி