ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2017

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில்,அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடவாரியாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில் சேர்க்கப்பட்டு, தினமும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. 'பாடத்தின் அனைத்து பகுதிகளையும், மாணவர்கள் படித்தால் தான், இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியும். 'எனவே, இந்த தேர்வை அதிக அளவில் எழுதும் போது, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளுக்கு, மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடியும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி