Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!

 “ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில  அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!


முதலில்…. ‘Senior Citizens’ * ‘மூத்த குடிமக்கள்’ எனப்படுவோர் யார்..?

 60 வயது மற்றும் அதற்கு மேலான வயது டைய இந்திய குடிமக்களுக்கு இப்பெயர் பொருந்தும். இதனால். இவர்களுக்கு என்னன்ன சிறப்பு நன்மைகள், சலுகைகள் மற்றும் இட ஓதுக்கீடு போன்றவற்றை இந்திய – தமிழக அரசுகள் செய்துள்ளன என்பது பற்றி, இங்கே உங்க ள் பார்வைக்கு தயாராக, நான் அறிந்த சிலவற்றை வைத் து கோர்க்கப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு இது ..!

இதில், நான் அறியாமல் தவறான தகவல்கள் அல்லது அரசின் தற் போதைய மாற்றங்கள் அல்லது புதிய சேர்பித்தல்கள் இருப்பின் மாற் றுவதற்காக, அவசியம் பின்னூட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்க  ள் சகோஸ்.

(1) மூத்த குடிமக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள்
------------------------------------------------------------
இந்திய மூத்த குடிமக்கள் சம்பந்த ப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரி மை வழங்கப்பட்டு அவை துரித மாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங் கப்பட்டு… அவ்வழக்கு அகற்றலை உறுதிப்படுத்த அனைத்து உயர் நீதி மன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி ஆலோசனை கூறியுள்ளா ர். [இந்திய அரசு கடிதம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (SD  பிரிவு) அமைச்சகம், புது தில் லி, எஃப் எண் 03.11.1999 தேதி யிட்ட 20-76/99-SD]

(2) தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)
-------------------------------------------------------------
தகவல் அறியும் உரிமை சட்ட த்தில் மூத்த குடிமக்கள் தாக்க ல் செய்தால்… அம்முறையீடு கள் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுபடி, அதற்கு மட்டும் மற் றவர்களின் தாக்கலைவிட உயர் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

(3) உடல்நலம்
-----------------------
மூத்த குடிமக்களுக்கான இவர் கள் எந்த மருத்துவ பரிசோத னை ஆனாலும் மருத்துவம னையின் வருகை டோக்கன் நம்பர் வரிசை இன்றி நேரடியா க மருத்துவரை அணுக முடியு ம். இதை ஏனோ பல தனியார் மருத்துவமனைகள் பின்பற்று வதில்லை. ஆனால், அரசு மரு த்துவமனைகள் மற்றும் ஆரம் ப சுகாதார மையங்களில் மூத் த குடிமக்களுக்கு என தனி வரி சைகளில் வர இடம் உள்ளது. தில்லி அரசு தில்லியில், இவர் களுக்கென தனியாக, ‘மூத்த குடிமக்கள் சிறப்பு மருத்துவமனை ஒன் றை இயக்குகிறது. ஆனால், மருத்துவமனைகளில் கட்டண சலுகை இருப்பதாக நான் அறியவில்லை. ஏனெனில், பொதுவாக வயதானா ல்தானே பலநோய்கள் வருகின்றன! தனியார் மருத்துவமனைகளின்  வியாபார இலாபமே வயதான நோயாளிகளை வைத்துத்தா னே! அப்புறம் எப்படி பில்லில் சலுகை என்று கையை வைப் பது..?

(4) வரி-சேமிப்பு
------------------------
58 இலோ அல்லது அதற்கு முன்பேயோ வாலண்டரி ரிடையர்மென்ட் தந்திருந்தா லும்கூட வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ள தகுதி வயதை (65 வருடங்கள்) அடைந்தால் … மூத்த குடிமக்களுக்கு என, அவர்களின் பென்ஷன் போக் குவரத்தில் வரு மான வரி சிறப்புத் தள் ளுபடி உண்டு.

 பொதுவாக… வயது குறைந்து இருந்தால் மட் டுமே இன்ஷ்யூரன்ஸ், சேமிப்பு திட்டம் ஆகிய இதிலெல்லாம் சேர்த்துக்கொள்வர்கள். ஆனா ல், வருமான வரி சட்டம் பிரிவு 80 C, 1961 ன் படி , 01.04.2007 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்வது யாதெனில்…. அஞ் சல் அலுவலகம் வைப்பு கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின்கீழ் முத லீடு செய்யப்படுவது 5 ஆண்டு நீட்டிக்கப்பட்டு ள்ளதாம்.

(5) வங்கி
--------------
 அரசு பொது துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அத ன் பெரிய நெட்வொர்க் மூலம் இயங்கும் சில சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் ‘மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில்… மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் வட்டி விகித ம் மற்றவர்களைவிட அதிகமாகவே தர ப்படுகிறது.
பல வங்கிகள், குறிப்பாக, பாரத ஸ்டேட்வங்கி, பின்வரும் வாடிக்கை யாளர் சேவைகளில்… மூத்த குடிமக்கள் எனில்… பொதுவாக பரிந்து  ரைக்கப்பட்ட கட்டணத்தில்  50% மட்டுமே வசூலிக்கிறது.

i) டூப்ளிகேட் பாஸ்புக்/ அறிக்கை பெறுத ல்,

ii) காசோலை புத்தகங்கள் வழங்குதல்,

iii) வங்கிக்கணக்கில் ஆகக்குறைந்தபட்ச இருப்பு அல்லாத பராமரி ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் அபராத கட்டணங்கள்,

iv) சமநிலை சான்றிதழ் வழங்குதல்,

 v) கையொப்ப சரிபார்த்தல், போன்றன ‘சீனியர் சிடிசன்’ எனில் பாதி கட்டணம் தான்..!

மேலும் வேறு என்னவெல்லாம் சிறப்பு வசதிகள், சலுகைகள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியம்  பெறுவோருக்கு உள்ளன என உங்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்று சரி பார்க்கவும்.

(6) தொலைத்தொடர்பு
-----------------------------------
 ஒரு புதிய தொலைபேசி இணை ப்பு விண்ணப்பிக்கும் மூத்த குடி மக்களுக்கு பல சிறப்பு ஏற்பாடு களை தொலைத்தொடர்பு துறை செய்து ள்ளது. விண்ணப்பத்தில்… மூத்த குடிமக்கள் எனில் தனி மு ன்னுரிமை வகை ஓதுக்கீடு செய் யப்படும். ஒரு மூத்த குடிமக்கள் புகார் முன்னுரிமை அடிப்படை யில் பரிசீலிக்கப்படும். சட்டம் போட்டுள்ளார்கள். அதன்படி நடக்கி றார்களா என்றுதான் தெரியவில்லை. தக்க சான்றிதழ் தனது மாதா ந்திர கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது.

(7) இந்திய ரயில்வே
-------------------------------
60 வயது அல்லது அதற்கு மே ற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயிலில் எங்கே சென்றாலும் … டிக்கட்டில் 30% தள்ளுபடி உண்டு. அதுவே… அவர் மூத்த குடிமகள் எனில் ( பெண் எனி ல்)ரயில் டிக்கெட்டில் 50% சலு கை உண்டு..! இந்த தள்ளுபடியானது… சதாப்தி… ராஜதானி உட்பட எல்லா ரயில்க ளிலும் உண்டு.

தயவுசெய்து டிக்கட் எடுக்கும் பொழுதும், பயணம் செய்யும் பொழுது  ம் அனைத்து மூத்த குடிமக்களும், தங்கள் வயது குறிப்பிடப்பட்டுள்ள அரசின் ஒரு புகை ப்பட அடையாள அட்டையை உடன் அவசிய ம் எடுத்து செல்லுங்கள். சலுகை பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ்…!

அதுமட்டுமா… டிக்கெட் வாங்குவதற்கு, முன் பதிவு அல்லது ரத்து செய்வதற்கு என… அனைத்து ரயில் நிலையங்க ளிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கென தனி கவுண்டர்கள்/வரிசைக ள் உள்ளன. ஒரே ஒரு கவுண்டர் வரிசை என்றால்… மூத்த குடி மக் கள் வரிசையில் நிற்கவேண்டி ய ஆவசியம் இல்லை..!

நேரே கவுண்டர் சென்று சான்றிதழ் காட்டி டிக்கட் வாங்கிக் கொ ண்டு போய் கொண்டே இருக்க வே ண்டியதுதான்.

இந்த சலுகையை எல்லாம் பெ ற்று பயன்பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ். அதேநேரம், வரிசையில் நிற்கும் மற்றவர்க ள் இவர்களை தங்களுக்கான சலுகையை பெற அனுமதியுங்கள் சகோஸ். மாறாக, ” யோவ் பெரிசு! என்ன நீ பாட்டுக்கு  நேரா கவுண் டருக்கு போறே…? வரிசைலே நிக்கிறவன்லாம் மனுஷனா தெரிய லையா…? கண்ணாடியை போட்டுட்டு இந்தப்பக்கமும் கொஞ்சம்  பாரு…!” என்றெல்லாம் தர்மப் படி மட்டுமல்ல… சட்டப்படியும் சக  ஜூனியர் சிடிசன்ஸ்… வா யைத்திறக்கக்கூடாது..!!! அறிய வும்.

மேலும், மூத்த குடிமக்கள் வசதி க்காக அனைத்து முக்கிய சந்தி ப்புகள், மாவட்ட தலைமையகம் மற்றும் பிற முக்கியமான ரயில் நிலையங்களில் எல்லாம் சக் கர நாற்காலிகள் எல்லாம் உள்ளன. பயன் பெறுங்கள்.

(8) ஏர்லைன்ஸ்
-------------------------
மூத்த குடிமக்கள் எனில், ‘சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு’ இந்திய  ன் ஏர்லைன்ஸ் விமான சிக்கன வகுப்பு கட்டண த்தில் 50% தள்ளுபடி பெரும் உரிமை உண்டு.

இதுவே, ஏர் இந்தியா என்றால்…. 45% தள்ளு படி வழங்குகிறது. (வய து வரம்பு : ஆண்கள் 65 + & பெண்கள் 63 + ).

இந்தியாவில் செயல்படும் மற்ற ஏர்லைன்ஸ்களும் மூத்த குடிமக் களுக்கு தள்ளுபடி வழங்கும். அதுபற்றி நீங்கள் உங்கள் பயண திட்ட த்தை ஏஜண்டிடம் கூறும் போது நினைவூட்டுங்கள்.

(9மாநில சாலை போக்கு வரத்து
--------------------------------------------------
மாநில சாலை போக்குவரத்து து றை தமது அனைத்து பேருந்துக ளிலும் முன் வரிசையில் 2 இரு க்கைகள் மூத்த குடிமக்கள் அமர… ‘முதியோர் இருக்கை’ மற்றும் ‘ஊனமுற்றோருக்கான இருக்கை’ என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. ஆனால், முதியோர் இருக்  கை & ஊனமுற்றவர் இருக்கை என்பது ‘மாற்றுத்திறனாளிகளி ன் இருக்கை’ என்று பெயர் மாற் றம் பெற்றதேயன்றி இதெல்லா ம் சரிவர நடைமுறையில் நம் மால் கடைப்பிடிக்கப்படுவதுமி ல்லை. நான் அந்த சீட்டுகளில் அமரவேமாட்டேன். இப்போதெ ல்லாம் அப்படி எழுதப்பட்டு இரு ப்பதையும் தனியார் பேருந்துக ளில் காண முடியவில்லை.

தமிழகம்  உட்பட பல மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கு என ரயி ல்வே போலவே மாநில அரசுப்பேருந்திலும் முன்பதிவில் கட்டண  சலுகைகள் தருகின்றன.முன்பதிவின்பொ ழுது விசாரித்து பயன் பெறுங்கள்.

(10) சட்டம் & சீர்திருத்தம்
--------------------------------------
எங்கெல்லாம்… “சீனியர் சிட்டிசன்” என்ற சலுகையை சட்டப்படி பெற விரும்புகிறீர் களோ, அங்கெல்லாம் உங்கள் கையில் இருக்க வேண்டியது மத்திய/மாநில அரசி ன் உங்கள் ஃபோட்டோ ஒட்டிய ஓர் ஐடி கார்டு. அதில் முக்கியமாக உங்கள் date of birth இருந்தாக வேண்டும்..!

இந்திய அரசால், சமீபத்தில் மூத்தகுடிமக்க ள் மற்றும் பெற்றோர் நலனுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இவர்களுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை உருவாக்குகிறது

6 comments

 1. Paper 1
  ஐந்தாண்டுகளுக்கு
  புதிய பணிநியமணம் கிடையாது
  என்று தகவல் உண்மையா நண்பர்களே?

  ReplyDelete
  Replies
  1. இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?

   Delete
  2. இருக்கிர வேகத்தில் கைல கிடைச்ச?

   Delete
  3. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
   2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

   Delete
 2. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives