ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை


சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மாயழகு, போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இவர் திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு துவக்கம்தான் என்றும், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும், காவல்துறையில் இருக்கும் தங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்றார்.

பின் பேசிய அவர், தமிழர்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு, அது முன்வைத்த காலை பின் வைக்கமாட்டார்கள் என கூறிய போது இளைஞர்களின் சத்தம் விண்னை பிளந்தது. மேலும் இது நியாமான போராட்டம் என்றும் தான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் கூறினார். இவ்வாறு உணர்வுபூர்வமாக அவர் பேசியதன் மூலம் அங்கு இருந்த இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. Replies
    1. நேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை

      ஆனால்,
      மேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.

      எப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும்.
      இது உலக நீதி .
      வாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.


      இன்று வேண்டுமானால்,
      எண்ணிக்கையில்
      உங்களைப் போன்று, நேர்மையானவர்கள்
      அரசுத் துறையில் குறைவானதாக இருக்கலாம், ஆனால் ,
      எப்பொழுதும் நேர்மையானவர்களைத் தான்,
      நேர்மையானமக்களால் விரும்புவர்கள்.

      Delete
  2. நேர்மையா, உண்மையா, தனது நியாயமான உணர்வை வெளிப்படுத்திய வருக்கு துறைறீதியாக நடவடிக்கை
    ஆனால்,
    மேல் மட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து, மனசாட்சிக்கு விரோதமாக , ஆட்டோவிற்கும், போலீஸ்டேஷனுக்கும் தீ வைத்தவர்களுக்கு எந்த விதமான விசாரண என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலை.
    எப்பொழுதும் உண்மை வெளிச்சத்தில் தலைநிமிர்ந்து நிற்கும், நேர்மையற்றத் தன்மை தலைக் குனிந்து மறைந்து தான் செல்ல வேண்டும். இது உலக நீதி .
    வாழ்த்துகள் மதியழகு காவலரே, என்றும் நீங்கள் காவலர் தான் உண்மைக்கும், நேர்மைக்கும்.

    ReplyDelete
  3. மிகச்சரியான வரவேற்கத்தக்க நடவடிக்கை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி