குழந்தைகள் தின கவிதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2017

குழந்தைகள் தின கவிதை

*கொண்டாடுங்கள் குழந்தைகளை*

குழலினும் யாழினும்
இசையாவினும் மேலென மழலைமொழி
இனிப்பென நவின்றான்
நம் முப்பால்தாத்தன்..

சிறுதளிர்கள்
மென்மலர்கள்
குட்டி பிரம்மாக்கள்
மகிழ்நிலாக்கள்
உயிர்மகிழ்ச்சிகள்
குழந்தைகள்

உங்கள்
அதட்டல்களில் 
ஓர் அப்துல்கலாம் பொசுங்கி விடலாம்
உங்கள் அச்சுறுத்தலில்
புதிய சிந்தனையாளன் கருக்கலைக்கப்படலாம்
உங்கள் பயமுறுத்தலில் 
ஒரு தத்துவஞானி தவறிப்போகலாம்..


பள்ளியில் பாடங்களோடு
பாசத்தின் மேன்மையை உணர்த்துங்கள்.
நெறிபிறழ்நடத்தைகளின் ஊற்றுக்கண் நம்மிலிருந்தும் கூட
தொடங்க நேரலாம்.

மதிப்பெண்ணை வைத்தே மதிப்பிட்டு
தனித்திறன்களுக்கு வாய்ப்பூட்டு போடாதீர்
எல்லாருக்கும்
பொதுக்கல்வி வாழைப்பழமே
பிடிக்குமென நினைக்க வேணாம்.
அதைத்தாண்டிய ருசிப்பழங்களும் ஏராளமுண்டு...

வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளில் வலியேற்றாதீர்
மாலை நேர மணியடிப்பில் மட்டுமே
நாளதுவரை குதூகலிக்கின்றன
குழந்தைகள்..

அவர்களைப் பொறுத்தமட்டில்
பள்ளிக்கூடங்கள் காலைநேரச்சிறைகள்..
மாற்றப்பட வேண்டியது
புதுமைபெற வேண்டியது
பாடதிட்டங்களோ கல்விமுறையோ இல்லை
கையாளும் நம் மனநிலையும்
இந்த சமூக நிலையும் தான்


கற்றலில் இனிமை பூசுவோம்
ஏனென்றால்
நம்முன் இருப்பது மதிப்பெண் இயந்திரங்கள் அல்ல..
மனசுள்ள குழந்தைகள் 

அன்பினால்
அரவணைத்து
நாமும் குழந்தைகளாவோம்
*குழந்தைகளுக்காய்*

*இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்*


*சீனி.தனஞ்செழியன்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி