Flash News : ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2017

Flash News : ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
டிடிவி தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளனர்.

அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8-ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது சுமார் 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வரைவு உத்தரவு தயார் செய்யப்பட்டு, அது ஆணையர்களுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் வரைவை சரிபார்த்து சில திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த திருத்தங்களை செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இது முடிந்து, பின்னர் மறுபடியும் மூன்று தேர்தல் ஆணையர்களின் பார்வைக்கும் வரைவு உத்தரவானது அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு ஒப்புதல் கையெழுத்திற்கு பின்னர் உடனடியாக இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தீர்ப்பு தற்போது வெளியாகி, ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

3 comments:

  1. Nalarunga, teacher KU padichu Tet eluthitu ukanthutu irunga engala inum evlo nal KU sakatika poringa, vacancy announce panama exam vachathey thappu. Ithula 6mth akium kandukama irukinga paru, neengalam nalla irupinga ,enga pavam ungala kekum

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி