SMART CLASS ROOM - இனி நாமே உருவாக்கலாம் அரசு பள்ளிகளிலும் - ஆசிரியர் ராஜீவ் குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2017

SMART CLASS ROOM - இனி நாமே உருவாக்கலாம் அரசு பள்ளிகளிலும் - ஆசிரியர் ராஜீவ் குமார்


சாதாரண வெள்ளை பலகையை குறைந்த செலவில் interactive kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் அரசுப் பள்ளி.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் நடுநிலைப்ப பள்ளியின் ஆசிரியர் ராஜீவ் குமார் அவர்கள், அவரின் பள்ளி நண்பர் திரு.ம.சீனிவாசன் M.E (U.S.A)அவர்களின் நிதி உதவியாலும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் ஆலோசனைகள் மூலமாக *தொடுதிரை வசதி கொண்ட INTERACTIVE SMART BOARD* ஒன்றை அமைத்துள்ளார்.

சாதாரண 6 x 4 என்ற அளவு கொண்ட வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கின்றனர்.

இதன் மூலம் உயர்தர தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி மிகுந்த பிள்ளைகளுக்கு மட்டுமே  கிடைக்கும் கல்வி முறையானது, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து educational appகளை பெரிய திரையில் தொட்டு  விளையாட்டு முறையில் கற்பிப்பதால் மாணவர்கள் ஆர்வமாக, கவனச் சிதறல் அடையாமல் கற்கின்றனர்.

இதில் உள்ள மென்பொருள் மூலம் கணித வடிவியல் கற்பித்தல், அறிவியலில் பட விளக்கங்கள் சார்ந்தவை மிக எளிதாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் ஸ்மார்டு போர்டை பயன்படுத்தி கற்பிக்கின்றனர்.

ஸ்மார்டு போர்டில் மாணவர்கள் பல வண்ணங்களில் எழுதி ஆர்வமாக கற்கின்றனர்.

இத்தகைய கற்பித்தல் முறையால் அரசுப் பள்ளிகளின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புக்கு,
ஆசிரியர் ராஜீவ் குமார்
9751521976







7 comments:

  1. . தங்களது முயற்சிக்கு வணக்கங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ithukku total cost evlo vanthuchu sir

    ReplyDelete
  3. Interactive kit பற்றி சற்று விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...sir

    ReplyDelete
  4. Interactive kit பற்றி சற்று விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...sir

    ReplyDelete
  5. நான் இதை வகுப்பில் பயன்படுத்த ஆர்வமாக உள்ளேன்.தங்களை எப்படி தொடர்பு கொள்வது

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே தங்கள் பனி சிறக்கட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி