நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலாவுக்கு ரூ.1லட்சம் பணமுடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2017

நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலாவுக்கு ரூ.1லட்சம் பணமுடிப்பு


சோனியாகாந்தி பிறந்தநாளைமுன்னிட்டு நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலாவுக்கு ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழக்கப்படுகிறது. இதுகுறித்து இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதவெறிக்கு எதிரான போரில் தன் மாமியார் இந்திராகாந்தியை இழந்த பின்னும், இனவெறிக்கு எதிரான களத்தில் தன் கணவர் ராஜீவ்காந்தியை துறந்த பின்னும், பன்முகத் தன்மை கொண்ட நம் இந்திய தேசத்தில் பதவி பெரிதல்ல என்று பிரதமர் நாற்காலியை தவிர்த்து பொது வாழ்வே துறவு வாழ்வு தான் என்று வாழும் தூயத் தலைவி சோனியாகாந்தி.

 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக பத்தாண்டு காலம் இந்தியாவிற்கு நல்லாட்சி வழங்கி, அந்த நல்லாட்சியில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், வங்கிகள் வழங்கிய விவசாயக் கடன் தள்ளுபடி, பாமரனும் மருத்துவம், பொறியியல் படிக்க வங்கிகள் மூலம் கல்விக் கடன் திட்டம், ஏழையின் வயிறுக்கு சோறிட உணவு பாதுகாப்பு சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி உரிமைச் சட்டம், ஊழலை தகர்த்திட தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை கொடுத்தவர் நம் சோனியாகாந்தி.

அவரது 71ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வரும் 2017 டிசம்பர் 9ம் தேதி சனிக்கிழமையன்று, மாலை 6.30 மணிக்கு சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில், ‘மாணவி அனிதாவின் மருத்துவக் கனவை கொன்ற நீட் தேர்வை’ எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சமூகப் போராளி சபரிமாலாவுக்கு சோனியா காந்தி விருதும், ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி