பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அபராதத்துடன் இன்று பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2017

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அபராதத்துடன் இன்று பதிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 1ல் துவங்குகிறது. இந்தஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முறையாக படிக்காமல், நேரடியாக பிளஸ் 2 பொது தேர்வு எழுதுவோருக்கு, இந்த ஆண்டு கடைசி வாய்ப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேரடி தனித்தேர்வர்களுக்கான பதிவு, டிச., 11ல் துவங்கி, டிச., 16ல் முடிந்தது. இந்த காலகட்டத்தில் பதிவு செய்யாதோர், இன்று முதல், அபராத கட்டணத்துடன் பதிவு செய்யலாம். இந்த பதிவு, 20ம் தேதி முடிகிறது. ஆண்டு தோறும், வழக்கமான விண்ணப்ப பதிவு தவிர, தனித்தேர்வர்களுக்கு, 'தட்கல்' முறையில், கூடுதல்கட்டணத்தில் விண்ணப்பிக்க, வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு, தட்கல் வாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, அபராத கட்டணத்துடன் இன்று துவங்கும் பதிவில், விண்ணப்பிக்க தவறினால், அவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாது.அடுத்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத விரும்பினால், முதலில் பிளஸ் 1 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வை எழுத வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி