பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6:00 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6:00 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை

புதுச்சேரி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடைவிதித்து அம்மாநில பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு, சில அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், இரவு வரை பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பிலேயே, கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அவர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் பெற்றோர்கள் தரப்பில், கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்தன. மாணவர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாலை 6 மணிக்குள் சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த நடைமுறையை, கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என, புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் வெளியில் செல்வதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த மதிய உணவு இடைவேளை நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி