Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

7-வது ஊதியக் குழுவில் திருத்தம் வேண்டும்..!ஜாக்டோ ஜியோ அமைப்பு அமைச்சரிடம் மனு


7-வது ஊதியக்குழுவிலுள்ள அசிரியர், அரசு ஊழியர்களின்வீட்டு வாடகை படி குறைப்பு அம்சத்தை திருத்தியமைக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
"சிவகங்கை மாவட்டம் 1985-ம் ஆண்டு முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனியாக செயல்படுகிறது. இதில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோயில் தற்பொழுது சிங்கம்புணரி என 9 தாலுகா செயல்பட்டு வருகிறது. இதில் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களைத் தவிர மற்ற தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஊர்களும் கடந்த ஊதியக்குழு வரை வகைப்படுத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி பட்டியலில் வைக்கப்பட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிய ஊதிய உயர்வினை அரசாணை 303 மூலம் அக்டோபர் 11-ம் தேதி அறிவித்தது. இதில் பலமுரண்பாடுகள் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குறை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தை மீறி நடத்தப்பட்ட போராட்டம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இரண்டு முறை ஒத்தி வைக்கபட்டுள்ளது.அந்த வழக்கு டிசம்பர் 20-ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது. அரசு ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகைப்படி குறித்து அக்டோபர் 13-ம் தேதி அரசாணை 305-ஐ தமிழக அரசு வெளியிட்டது.

இதில் சிவகங்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட படி வழங்கப்படாமல் குறைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிவகங்கையில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்புஏற்படுவதாகவும் அதனைச் சரி செய்து துணை அரசாணை வெளியிட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் லதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் பின் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர் பாஸ்கரனைச் சந்திந்து மனு அளிக்கப்பட்டது. அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

3 comments

 1. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 7700-க்கும் மேல் சம்பளம் ஏற்றுவதற்கு வழியில்லை என்று அரசும் அரசு அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் 6 வருடங்களாக எங்கள் வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள். அனைவரும் நடுத்தர வயதைக் கடந்து எங்களது வாழ்க்கையை மட்டுமில்லாமல் எங்களது பிள்ளைகளின் படிப்பும், அவர்களுக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை மட்டுமல்லாமல் எங்களை நம்பியுள்ளவர்களின் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள். பள்ளியில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வேலைகளையும் எங்களிடம் பகுதிநேரம் என்றில்லாமல் முழு நேரமாக வாங்கி வரும் தலைமையாசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் எங்கள் நிலையை அரசிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை? அப்ப தெரியமாட்டேங்குது நாங்க பகுதி நேர ஆசிரியர் என்ற அடிமையாக அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டவர்கள் என்று!
  அரசாங்கமே உங்களுக்கு அடிமையாக இருந்து 7000, 8000, 9000 என்ற மதிப்பு ஊதியம், ொகுப்பு ஊதியம், நிலை ஊதியம் என்ற பல்வேறு பெயர்களில் அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களை விட மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நியமிக்கிறது. தயவு செய்து சம்பளமாவது எங்களது வயிற்றுக்கு வருமாறு நிர்ணயம் செய்யுங்கள். நம்பி வந்து விட்ோம் என்பதற்காக எங்கள் குடும்பத்தைப் பட்டினி ோடாதீர்கள். அரசே இப்படி செய்தால்??? படித்துவிட்டு இத்தனை ஆண்டுகள் வேலை கிடைக்காத காரணத்தால் தானே இப்படி வந்து வாழ்க்கையை உங்களிடம் அர்ப்பணித்து உள்ோம்??? தயவு செய்து ஸ்கீம் என்றெல்லாம் புதியதாக எதையாவது ொல்லாமல் மனிதாபிமானமாக மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று எங்களுக்கு வாழ்வளியுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அணைத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் voter ID ration card AAdhaar card போன்ற அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து போராடவேண்டும் இதுவே இருதி வெற்றி உறுதி

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives