கை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2017

கை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்!!!




திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.

நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

8 comments:

  1. Very heart full Salute collector sir....

    ReplyDelete
  2. ஆட்சியர் அவர்களுக்கும் வருங்கால இந்தியாவை வளமான இந்தியாவாக
    உருவாக்க காத்திருக்க கொண்டு
    இருக்கும் என்னுடைய அன்பு
    சகோதரிக்கு இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Super collector
    sir and I salute u for your motivation

    ReplyDelete
  4. எங்கள் கல்வி மாவட்டத்தில் (முசிரி) மாவட்ட கல்வி அலுவலாரக இருந்தவர் கல்வி சீர திருத்தம் செய்தவர் முதன்மை மாவட்டமாக மாற்றியவர் அவர் செல்லும் இடம் எல்லாம் சிரப்படைவார் அவர்தான் ஜெயக்குமார்

    ReplyDelete
  5. வணக்கம்

    ஆசிாியா் ேதா்வு வாாியம் 13/10/17 அன்று 149 காலிப்பணியிடங்களுக்கான சான்றிதழ் சாிபாா்ப்பு 27/10/17 அன்று ெசன்ைன அேேசாக் நகா் பள்ளியில் ைவத்து நடந்தது, ஆனால் இன்னும் முடிவு ெவளியிட வில்ைல, எப்ேபாது முடிவு ெவளியிடுவாா்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி