தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2017

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி