தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமை; நீதிபதி கண்டிப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2017

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமை; நீதிபதி கண்டிப்பு: மத்திய அரசுக்கு உத்தரவு

ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமையை ஏற்றும்தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை கண்டித்துள்ள நீதிபதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி விதிகளின்படி ஒன்றாம் வகுப்பில் அவரவர் தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்படுகின்றது.
ஆனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறிவியல், இந்தி, நன்னடத்தைப் பாடங்களையும் கூடுதலாக சேர்த்து ஒன்றாம் வகுப்பிலேயே பாடச்சுமை திணிக்கப்படுவதால் அதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன்வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சிபிஎஸ்இ வாரியம் வெறுமனே எச்சரிக்கை விடுப்பதோடு நின்று விடாமல், முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கு குறித்து மத்திய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, தமிழ்நாடு தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 10ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.மேலும், என்சிஇஆர்டி விதிகளை பின்பற்றாமல் மாணவர்களின் நலனுக்கு எதிரான சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்என்றும், தேவைப்பட்டால் அப்படிப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மழலைப் பருவத்தில் மாணவர்களுக்கு கல்வியும், பாடப் புத்தகமும் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என தெரிவித்ததுடன், முதலாம்வகுப்பு படிக்கும் குழந்தையின் மீது அதிக புத்தகச் சுமையை ஏற்றுவது அநியாயம் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி