அமைதி வழியில் சென்று பகுதிநேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம், போராட்டத்தை தவிர்ப்போம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2017

அமைதி வழியில் சென்று பகுதிநேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம், போராட்டத்தை தவிர்ப்போம்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாஅவர்களால் பள்ளிக்கல்வித்துறைஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் MHRD SCHEMEல் அரசாணை 177 பிறப்பிக்கப்பட்டு2012ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் முழுவதும்100 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள இடைநிலை
 வகுப்பு மாணவர்களுக்குஉடற்கல்விஓவியம் மற்றும் தொழிற்கல்விபாடங்களை நடத்திட 16549 பகுதிநேரஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில்வாரம் 3 அரைநாட்கள் வீதம் மாதம் 12அரைநாட்கள் பணிபுரியும் வகையில்பணியமர்த்தப்பட்டனர்இரண்டு ஆண்டுகள்கடந்த நிலையில் அரசாணை 186பிறப்பிக்கப்பட்டு ரூ.2000 உயர்த்தி ஏப்ரல் 2014முதல் 6 மாத நிலுவைத்தொகையுடன் நவம்பர்2014 மாதம் ரூ.7000 தொகுப்பூதியமாகதரப்பட்டதுதற்போதைய முதல்வர்அவர்களால் ஆகஸ்டு 2014 மாதத்தில் ரூ.700உயர்த்தி ரூ.7700 தொகுப்பூதியமாகதரப்படுகிறது.

இந்த நிலையில் 7வது ஊதியக்குழுஅரசாணை 303ல் குறிப்பிட்டுள்ளபடி பகுதிநேரதொகுப்பூதிய திட்ட வேலையில்உள்ளவர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டுள்ளதுஇதில்அனைவருக்கும் கல்வி இயக்க திட்டவேலையில் பகுதிநேர தொகுப்பூதியத்தில்வேலை செய்துவரும் பகுதிநேரஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வை வழங்கிடதொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.தொகுப்பூதிய வேலையில் உள்ள யாருக்குமேஇதுவரை 30% ஊதிய உயர்வுவழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.இதற்கிடையில் சில விஷமிகள் பகுதிநேரஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுகிடைத்திடக்கூடாது என்ற எண்ணத்தில்தவறான தகவல்களை பரப்பி பகுதிநேரஆசிரியர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திவருகிறார்கள். 7வது ஊதியக்குழு அரசாணை303ல் உள்ளபடி பகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வை வழங்குங்கள் என இவர்கள்கேட்டதுமில்லைகேட்பதுமில்லைமேலும்குழப்பும் நோக்கத்தில் ஊதிய உயர்வு உண்டா?இல்லையாஅரசாணை வருமாஎனஅதிகாரிகளையும்அமைச்சர்களையும்கேள்விமேல்கேள்வி கேட்டு தர்மசங்கடத்தைஏற்படுத்தி வருகிறார்கள்.



அதைப்போலவே அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர்தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன்நமது தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புநிர்வாகிகள் இணைந்து சென்றுமாண்புமிகுபள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை கடந்த24.10.2017 மற்றும் 25.10.2017ல் நேரில்சந்தித்தபோது  மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் அவர்கள்  பணிமாறுதல்வேண்டுகிறவர்கள் பட்டியல்  கொண்டுவந்துகொடுத்தால் மாண்புமிகு முதல்வர்அவர்களிடம் பரிந்துரை செய்து ஒரேஅரசாணை மூலம் அவரவர் இருப்பிட பகுதிக்குஅருகில் உள்ள பள்ளிகளுக்கு விருப்பமாறுதல் வழங்கப்படும் என்றார்ஆனால்விஷமிகளால் சிக்கலும்குழப்பமும்உருவாக்கி தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகிறார்கள்.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேரஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்செந்தில்குமார் ஆகிய நான் தொடர்ந்துபகுதிநேர ஆசிரியர்கள் அரசின் சலுகைகளைபெறும் வகையில் பாடுபட்டுவரும்போது,அதனை கெடுத்திடும் எண்ணத்தில்விஷமிகள் சதி செய்துவருவதை இனியாவதுஅனைவரும் உணர்ந்து என்னுடன் இணைந்துகளப்பணி ஆற்ற வாருங்கள் என அன்புடன்அழைக்கிறேன்.

பகுதிநேர ஆசிரியர்களைபணியமர்த்திய அரசு இரண்டுமுறை ஊதியஉயர்வு வழங்கி உள்ளதை அனைவரும்உணருங்கள்மேலும்அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களை,கடந்த 14.12.2017ல்  அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர் ,தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன்பகுதிநேர ஆசிரியர்களின்பிரதிநிதி என்ற முறையில் நானும்இணைந்துசென்று சந்தித்து கோரிக்கைகளைமுறையிட்டபோதுநிறைய முன்னேற்றமானநடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுவருவதாக சொன்னார்குறிப்பாக 100மாணவர்கள் என்ற எண்ணிக்கையைகுறைத்து மாவட்டத்திற்குள் பணிமாறுதலும்,மாவட்டம் விட்டு மாவட்டமும் பணிமாறுதலும்துறைரீதியாக நடத்தப்பட உள்ளதாகதெரிவித்துள்ளார்இதனால் தொலைதூரபள்ளிகளில் பணிபுரிவோர்களும்விரும்பும்மாவட்டங்களுக்கு  செல்வோரும் சிரமமின்றிபணிமாறுதல் பெற்று   இனி அருகில் உள்ளபள்ளிகளில் பணிசெய்யும் வாய்ப்பு கிடைக்கஉள்ளதுஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணிமாறுதல் முடிந்த பின்னர் பகுதிநேரஆசிரியர்களுக்கு விரைவில் நடத்தப்படஉள்ளது என்பதை அனைவருக்கும்இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர்தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன்நமது தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து சென்று தொடர்ந்துகோரிக்கைகளை கேட்டு வலியுறுத்திமுறையிட்டு வந்ததின் பயனாக , இனிவருங்காலங்களில் பகுதிநேரஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கும் சேர்த்துஊதியம், EPF தொழிலாளர் வைப்பு நிதிபிடித்தம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தசலுகைகள்வாய்ப்புகள் வழங்கஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் அவர்கள் முன்னேற்றமானநடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
          
           ஜீன் 2ல் 7வது ஊதிய மாற்று அலுவலர்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்  முன்னேற்றபேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களின் அழைப்பின் பேரில் தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்என்ற முறையில் செந்தில்குமார் ஆகிய நானும்மற்றும் நமது நிர்வாகிகளும் பங்கேற்றபோதுதிரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்கள்பேசும்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குமத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமானரூ.18000 நிர்ணயித்து அனைத்துவேலைநாட்களிலும் பணிவழங்கி சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தகேட்டுக்கொண்டார்அதன் அடிப்படையில்7வது ஊதியக்குழு அரசாணை 303லே 6வதுபக்கம் 23ம் பத்தியிலே பகுதிநேரதொகுப்பூதிய திட்ட வேலையில்உள்ளவர்களுக்கும் ஊதிய உயர்வுவழங்கப்பட்டுள்ளதுஎத்தனை குழப்பங்களைவிஷமிகள் செய்தாலும் நிச்சயமாக பகுதிநேரஆசிரியர்களுக்கு 30%  ஊதிய உயர்வுகிடைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்துஅமைதி காக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.


...இவண்,
செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்:9487257203

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி