ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2017

ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில், நான்கு நாட்கள் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' எனும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், செப்., 7 - 15 வரை, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


நீதிமன்றம் தலையிட்டு, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அப்போது, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு இணையாக, விடுமுறை நாட்களில், பணி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது, இரண்டாம் பருவத் தேர்வு முடிவடைந்து, ஜன., 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, டிச., 27 - 30 வரை, கணினி பயிற்சி வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, வகுப்பறைகள் மற்றும் பயிற்சிகளை வழங்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

5 comments:

  1. ஆசிரியர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயிற்சி கொடுங்க..ஆனா கம்ப்யூட்டர் படிச்ச ஆசிரியர்களை அம்போ னு விட்ருங்க. ஏன்னா அவங்களாம் பாவம் செஞ்சவங்க..

    ReplyDelete
  2. வரும்...... ஆனா ,
    வராது .....

    ReplyDelete
  3. Oh oh pgwelfarelist Eppo varum ethananal wait

    ReplyDelete
    Replies
    1. Coz of poly recv list. Trb informed that only after completing poly problem.. they will take another it seems. We need to give pressure for them otherwise they will not release soon. 2013 it happened it seems they got appointment only in the march ..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி