ஆசிரியர்கள் இடமாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2017

ஆசிரியர்கள் இடமாற்றம்!

அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும் ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,600 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 1,800 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அரசின் நிதியுதவி பெறும், தனியார் பள்ளிகளாக செயல்படுகின்றன.
இந்த பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசின் திட்டங்களின் படி, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் இலவச திட்டங்களின்படி, புத்தகம், சைக்கிள், 'லேப் - டாப்' போன்றவை வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆசிரியர்களுக்கும், அரசால் சம்பளம் மற்றும் சலுகைகள்வழங்கப்படுகின்றன.ஆனால், அரசு உதவி பெறும் பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், போலி மாணவர்களை கணக்கு காட்டி, திட்ட பலன்களை பெறுவதாக, புகார் எழுந்தது. இது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர் எண்ணிக்கை அதிகம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளில், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு, அரசின் நிதியில் இருந்து, வீணாக சம்பளம் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து, உயர் மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதலாக இருந்த, 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளி களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், தொடக்கப் பள்ளிகளிலும், 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம்செய்ய முடிவாகியுள்ளது. அதற்காக, மாணவர் எண்ணிக்கை, கூடுதல் ஆசிரியர்கள் பணியிட விபரங்களை, இயக்குனரகத்துக்கு அனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.இந்த பட்டியலின் படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அரசு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.

3 comments:

  1. private college la vela pakravanga admissions pora mathri indha payalunga admission duty pogalame, avanungaloda pasangalayum private school la sethutu summa ukkandhutu vekkame ilama sambalam vanguranga, govt sambalam vangitu govt kum makkalukkum dhrogam pandranga. ivanungala students seralanu solli dismiss panna vendiyathu thana. ithu oru scam agum, erkanave annamalai university la irundhu egapatta lecturers ku govt clgs transfer potrukanga, nattula kashta pattu padikiravan nilamai kevalama poitu iruku,

    ReplyDelete
  2. முக்கிய அறிவிப்பு:
    வருகின்ற Rk நகர் இடைதேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு புரட்சிதலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு களம்காணும் ஆளும் கட்சி வேட்பாளர் திரு மதுசூதனன் அவர்களை ஆதரிப்பதாக நமது கூட்டமைப்பு ஒருமனதாக கடந்தவாரம் தீர்மானம் நிரைவேற்றியது.
    அதன் தொடர்ச்சியாக

    🔆RK நகர்தெகுதியில் வசிக்கும 2013 TETஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற நமது நண்பர்கள் இரட்டை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிக்கு உறுதுணை நல்குமாறு கேட்டுகொள்கிறோம்.

    🔆 களப்பணி ஆற்றிடவும் தயாராவீர்

    🔆 நமதுகூட்டமைப்பு வெளியிடும் ஆதரவு பிரச்சார வாசகங்களை சமூக வலைதளங்களில் பரப்பிடுமாறும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


    திரு.ம.இளங்கோவன் மாநில ஒருங்கிணைப்பாளர்
    திரு.சு. வடிவேல் மாநில தலைவர்
    திருமதிசண்முகப்பிரியா மாநில செயலாளர்
    திருமதி சித்ரா மாநில து செயலாளர்
    திருபிரபாகரன் மாநில பொருளாளர்
    திரு கார்த்திகேயன் மாநில து பொருளாளர்
    திரு பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர்
    திரு ஏகாம்பரம் மாநில து.அமைப்பாளர்
    மாநில ஆலோசகர்கள்
    திருமதி சுகுணாதேவி
    திருவிஜயக்குமார்
    திருமதிஹெலினா மாலதி
    திருசங்கர்
    திருமதி சித்ரகலா
    திரு அன்பரசு
    மற்றும் மாநில நிர்வாகிகள் & மாவட்ட நிர்வாகிகள்


    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி