தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது : செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2017

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது : செங்கோட்டையன்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்றும், கல்வித்துறையில் பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முதல்வர், மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த விருதுக்காக மாவட்டம்தோறும் 30 மாணவர்கள் வீதம் 960 பேருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும், விருதுடன் பரிசுத்தொகையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 10 ஆயிரமும், 12 வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

10 வகுப்பு முடித்து சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்கப்பட்ட 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் குழப்படையாமல் தேர்ந்தெடுக்க உதவ முடியும் என்றும், லேப்டாப் கிடைக்காத மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மாநிலம் முழுவதும் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் 4 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

1 comment:

  1. *🅱💢 JACTTO-GEO போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ததை மறுபரிசீலனை செய்யலாம்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!*


    💢https://kaninikkalvi.blogspot.in/2017/12/jactto-geo_28.html

    More News Click Here

    Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி