தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்: வைகோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2017

தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்: வைகோ

தமிழக உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், 4 ஆயிரத்து 84 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், 17 ஆயிரம் தாற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல அறிவிப்புகள்செய்யப்பட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களைச் செயல்படுத்த அறிவிப்புகள் செய்யப்பட்டன. கல்வித்துறையின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுடையது. எனவே, ஆசிரியர் பணி இடங்களை முறையாக நிரப்ப வேண்டியதுஅவசியம். ஆனால், தமிழகத்தில் 950 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மேலும், 5 முதன்மைக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும், 35 மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, கல்வித்துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும் எனில், முதலில் அடிப்படைக் கட்டமைப்புகளிலும், காலிப் பணி இடங்களை நிரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி