பஞ்சாங்கம் சொன்னது பலித்தது.. இன்னும் என்னவெல்லாம் நடக்கும்..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2017

பஞ்சாங்கம் சொன்னது பலித்தது.. இன்னும் என்னவெல்லாம் நடக்கும்..?


முற்காலத்தில் பஞ்சாங்கத்தை வைத்துத்தான், மழை, நீர் வளம், விவசாயம், கோடை இவற்றை கணித்தார்கள். அது ஓரளவு துல்லியமாக அமையும் என்றாலும் சில நேரம் பொய்த்துவிடும்.
ஆனால், இங்கே பஞ்சாங்கத் தகவல்கள், கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே நடந்து வருவதை
இப்போது உணர முடிகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார். இந்த பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று-மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.

அதே போல தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து பல ஏரிகள் நிரம்பின. பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் வீசும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது. தற்போது புதிய புயல் உருவாகி உள்ளது. கடலூர், ராமேசுவரம் பாதிக்கும் என்றும் எழுதப்பட்டு உள்ளது. எனவே அந்த இரண்டு மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மேலும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு உறை பனி வீசும் என்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், விமான விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும், இயற்கையின் சீற்றத்தை அப்படி ஒன்றும் துள்ளியமாக கணித்துவிட முடியாது.

பெரும்பாலான தகவல்கள் பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன. இருந்தாலும்.... பஞ்சாங்கம் பலவற்றை முன்னாலேயே கணிக்க வைத்து சொல்லியிருப்பதும் கருருத்தில் கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி