பைக் ஓட்டுபவர்களுக்குக் கூகுள் மேப்ஸில் புதிய வசதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2017

பைக் ஓட்டுபவர்களுக்குக் கூகுள் மேப்ஸில் புதிய வசதி!


வாகனப் போக்குவரத்துக்கேற்ற சுலபமானவழிகளைத் தேர்தெடுக்க உதவும் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு எனத் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் புதிதாக ஒருவர் செல்ல விரும்பும்போது அவருக்குக் கை கொடுக்கும் சாதனமாக விளங்குவது கூகுள் மேப். குறிப்பாக வாடகை கார் இயக்கும் நிறுவனங்களுக்கு இந்தச் சேவை வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எனஇந்தச் சேவையில் தனிப்பிரிவு இல்லாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் கூகுள் மேப்ஸில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி நேற்று(டிசம்பர் 5) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்தச் சேவை அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமான சேவை போன்று இதிலும் குரல் வழி வழிகாட்டும் சேவையும் உள்ளது.

கூகுள் மேப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கெனவே இருக்கக் கூடிய டிரைவ், டிரெயின் அல்லது பஸ் மற்றும்வாக் ஆகிய வசதிகளோடு தற்போது பைக் வசதியும் புதிதாக சேர்ந்துள்ளது.இதுகுறித்து கூகுள் துணைத் தலைவர் சீசர் சென்குப்தாகூறுகையில், உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனச் சந்தையாக இந்தியா உள்ளது. எனவே, இதைப் பயன்படுத்தும்லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு என இதர வாகனங்களைப் போல அல்லாமல் பிரத்யேக வசதிகளை அளிக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் பைக் பயணத்தின்போது உள்ளூர் அடையாளத் தலங்களையே நினைவில் வைத்துக்கொள்ளவிரும்புவார்கள். அதன்படி பயனாளர்கள் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் அடையாளத் தலங்கள் அனைத்தும் தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில்தான் இந்தச் சேவைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

1 comment:

  1. TNPSC CCSE GROUP-IV & VAL STUDY MATERIAL AVAILABLE.

    TRB-COMPUTER INSTRUCTORS-COMPUTER SCIENCE STUDY MATERIAL AVAILABLE.

    Materials are sending through COURIER.
    CONTACT :8072230063

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி