இரண்டாம் பருவ விடுமுறை நாட்களில் நடைபெற இருக்கும் கணினி பயிற்சியினை ரத்து செய்திட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2017

இரண்டாம் பருவ விடுமுறை நாட்களில் நடைபெற இருக்கும் கணினி பயிற்சியினை ரத்து செய்திட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

*இரண்டாம் பருவ விடுமுறை நாட்களில் நடைபெற இருக்கும் கணினி பயிற்சியினை ரத்து செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர் கோரிக்கை


🌟 பேரண்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,


🌟 ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் கணினி பயிற்சி வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ள நிலையில் நேற்று,


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர், தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கார்மேகம் அவர்களை சந்தித்து பயிற்சி வகுப்பினை இரத்து செய்திட கோரிக்கை  வைத்துள்ளார்.


*🌟 தொடக்கக்கல்வி இயக்குநரிடம் பொதுச்செயலார் வைத்த கோரிக்கை தொடர்பாக கூறிய விபரம்.*


🌟 வேலை நிறுத்த போராட்ட காலமானது, நீதிமன்றத்திலேயே பதில் நாளாக சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்வது எனவும்,


🌟 ஏற்கனவே பல மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சனிக்கிழமைகளில் வேலை செய்ய உத்தரவு பிறப்பித்து, சனிக்கிழமைகளில் ஈடு செய்யும் நாளாக பணியாற்றி உள்ளதையும்,


🌟 மேலும் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்ல ஏற்கனவே திட்டமிட்டுள்ளதையும் கூறியுள்ளார்.


🌟 கோரிக்கையின் சாரம்சத்தை கேட்ட தொடக்கக்கல்வி இயக்குநர் மனுவினை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.


🤝 தோழமையுடன்;

செ.பாலசந்தர்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



✍️ தகவல் பகிர்வு:

தோழர்.ரஹீம்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி