Flash News : நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2017

Flash News : நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.


மக்கள் விருப்பதின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்றும், வங்கி எண், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மக்கள் தாங்களாகவே இணைத்துக்கொள்ள வேணடும் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யும் மத்திய அரசின் கருத்தையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 பிப்ரவரி 6-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதிக்கு நீட்டிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதிய உணவு திட்டம், மருத்துவ வசதிகள் பெறுதல், சிலிண்டர் மானியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு வழங்கும் நலத்திட்டத்துக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 பிப்ரவரி 6-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதிக்கு நீட்டிப்பது குறித்தும் அப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, பான் கார்டு, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், செல்லிட்டப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு 2018 பிப்ரவரி 6-ஆம் தேதி என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலயில, ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது.

7 comments:

  1. *முக்கிய அறிவிப்பு*

    *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நமது கூட்டமைப்பு, R K நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய இ.மதுசூதனன் ஐயா அவர்களை முழு மனதாக ஆதரித்து கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களின் அன்பு பெற்ற உடன்பிறவா சகோதரர் ஐயா அவர்களின் வெற்றிக்காக அனைத்து கல்வி மற்றும் பிற சமுக வலைதளங்கள் வாயிலாக அரசினுடைய சாதனைகளையும், இந்திய திரு நாடே வியக்கும் வகையில் பள்ளிக்கல்வியில் பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும் வலைதள பரப்புரையையும், களப்பணியையும் ஒரு சேர சிறப்பாக செய்துவருகிறோம்

    ❌❌❌❌❌எச்சரிக்கை❌❌❌❌❌❌
    இந்நிலையில்,நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான ,கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை பரப்பி வருகின்றனர். அதற்கும் நமது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவர்களின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமை ஆலோசித்து வருகின்றது.*

    *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு*

    ReplyDelete
  2. ஓட்டு என்பது தனி மனித உரிமை.
    யாருக்கு போட வேண்டும்??????????
    எந்த தகுதியின் அடிப்படையில் போட வேண்டும்???????
    தொகுதியின் எதிர்கால முன்னேற்றம் எப்படிசொன்னா சொன்னபடி செய்ய முடிந்த செயல் திறன் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு மக்கள் சுய சிந்தனையுடன் முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Ethu thani manithan suya mudivu
    Karuthu thinipai earkka koodathu

    Sarvathikaram thalai thookka muthar padi
    Don't support

    ReplyDelete
  4. Namma teacher's politicians illa

    So don't support

    ReplyDelete
  5. Yaru nallavangalo avangaluku jananayaka kadamai padi vote pannunga

    Mr kalviseithi admin
    Epo vunga kalvi valaithalam pracharathuku use panranga

    Only education post mattum poda sollunga otherwise block pannunga

    Yaruku vote pannanumnu makkaluku theriyum
    So don't loose talk

    ReplyDelete
  6. உச்ச நீதி மன்றமே, உயர் நீதிமன்றமோ,
    எந்த நீதித்துறையும் மக்களுக்கு ஆனது என்றால் ,
    எவ்வளவு ஏற்றத்தாழ்வு , சாதி மத வேறுபாடு , பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தும் மக்கள் என்றால் ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்பது உண்மையெனில்,
    முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவர்,
    பிரதம மந்திரி , அனைத்து அமைச்சர்கள், M.P's , அனைத்து மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்களான I. A. S, IPS முதல் கடைநிலை ஊழியரான cleark வரை உள்ளவர்களும் , அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களில் உள்ள முதலமைச்சர், ஆளுநர் முதல் அமைச்சர்கள், M. L.A's , அனைத்து மாநில ஊழியர்களான மாநகராட்சியிலிருந்து அனைத்து மாநிலத் துறை கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள மக்கள் வரிபணத்தை பெற்று ஊழியம் செய்யும் அனைவரும் முன் உதாரணமாக ,
    தங்கள் PAN Card, phone No, மற்றும் நீங்கள் கூறுகின்ற வங்கி கணக்கு போன்ற அனைத்தையும் ஆதாருடன் இணைத்து ஒரு எடுத்துக்காட்டாக இன்நாட்டு மக்களுக்கு திகழ வேண்டும்.
    பின்பு
    சத்துணவுக்கு, இலவசத்திற்கு நிற்கும் சாமானிய மக்கள் ஆதாருடன் இணைக்க வேண்டியதை இணை் க்க வேண்டும் என்று உத்தரவு போட்டால் அவர்களுக்கும் புரியும் அரசு செயல் திட்டமும் சென்று சேர வேண்டியவர்களைச்சேர்கின்றது என்று பயமில்லாமல் நலத்திட்டத்தை அறிவிக்கலாம். செயல்படுத்தலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி