10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2018

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைந்தது ஏன்? – அரசுப் பள்ளி ஆசிரியர்களை வருத்தெடுத்த ஆட்சியர்


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை ஆட்சியர் கந்தசாமி சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.

▪ராந்தம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி திடீரென ஆய்வு நடத்தினார். பின்னர் செய்யாறு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்தது என அவர் கேள்வி எழுப்பியதற்கு ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டியதால் ஆட்சியர் ஆத்திரம் அடைந்தார். 6ஆம் வகுப்பில் இருந்தே முறையாக கற்றுக் கொடுத்து இருந்தால் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என்று அவர் கடிந்து கொண்டார்.

▪ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று கூறிய அவர், இதனால் தான் தனியார் பள்ளிகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கண்டித்தார். ஆசிரியர்கள் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

▪இதையைடுத்து செய்யாறு கல்வி மாவட்ட மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வியில்பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சவை நடிகர் தாமு கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்

8 comments:

  1. Honourable KANDHASAMY IAS sir continue yours inspection,w e are all appreciate for your work,

    ReplyDelete
  2. SRIRAM COACHING CENTRE - PULIANGUDI..
    CCSE - GR4 MODEL TEST

    MODEL TEST -1
    MODEL TEST -2
    MODEL TEST - 3
    MODEL TEST - 4
    MODEL TEST - 5 With Answer and OMR Sheet...

    Only 500rs..
    Sent through Courier

    Booking Person Only..
    Cell : 86789 13626..

    ReplyDelete
  3. எங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே அரசு வைத்திருந்து விட்டு இப்பொழுதாவது நமக்கு பணி கிடைக்கிறதே என்று பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனையோ பேர் இந்த 5000 த்துக்காகவும் இறங்கினோம். எங்களுக்கு 2 அல்லது 3 பள்ளிகள் என்று கூறிவிட்டு இந்த அரசு ஏமாற்றிவிட்டது. சம்பளமும் கால் வயிற்றுக்கு கூட போதாத நிலையில் வயது அதிகமாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரிவர திட்டமிட முடியாமலும் நாங்கள் நொந்து செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனியாரைவிட எங்களை ஸ்கீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் ஆசிரியர்களின் போராட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இருப்பது தெரிகிறது இவர்களுக்கு. மாணவர்களின் நலன் கருதி என்று பல்வேறு வேலைகளை வாங்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொற்ப சம்பளத்தில் படும் துயரம் எங்கே தெரியப்போகிறது? பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே! தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! ஆண்டுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்பளம் எங்களுக்கு ஏற்றப்பட்டதும் வெறும் 700 தான்.

    ReplyDelete
    Replies
    1. பாவம் புண்ணியம் பாத்து வேலை குடுக்கணும்னா தமிழ் நாட்டுல இருக்குற எல்லாருக்குமே தான் அரசாங்க வேலை குடுக்கணும், எல்லாமே வாய பொளந்துட்டு தான் உக்கந்துருகோம், கிடைக்கும் கிடைக்கும்னு, இனிமேல் TET TRB TNPSC எதுவுமே இருக்க கூடாது போல,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி