2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதிநடைபெறும் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2018

2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதிநடைபெறும் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கானஇடங்களை  நீட்;  எனப்படும் தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்பவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவஇடங்கள் நிரப்பப்பட்டன.இதனிடையே, நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும்இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள்வெளியாகின. ஆனால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வில்பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம்ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம்கொடுத்துவிட்டது.இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம்தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.த

மிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்றபோதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டியநிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள்உள்ளனர்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும்கருத்தில் கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாநிலபாடத்திட்டங்களையும் இணைப்பது குறித்து மத்தியஅரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால், நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுஎந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி