350 இளநிலை உதவியாளர் பதவி : மின் வாரியம், 'கட் ஆப்' வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2018

350 இளநிலை உதவியாளர் பதவி : மின் வாரியம், 'கட் ஆப்' வெளியீடு

மின் வாரியம், காலியாக உள்ள, 350 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 'கட் ஆப்' மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, கள உதவியாளர், இளநிலை உதவியார் உள்ளிட்ட, 10 பதவிகளில் காலியாக உள்ள, 2,175 இடங்களுக்கு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்தது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பணியிடங்களுக்கும், 2016 ஜூன் - ஆக., இடையே, எழுத்து தேர்வு நடந்தது. ஆனால், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், இளநிலை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு, நேர்காணல் நடத்த முடியவில்லை.மற்ற பதவிகளுக்கு, நேர்காணல் உட்பட, அனைத்து பணிகளும் முடித்து, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை உதவியாளர் நிர்வாகம் ஆகிய, 350 பதவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உள்ளோர், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.நேர்காணல் முடிந்ததும், எழுத்து, நேர்காணல், கல்வி தகுதி ஆகியவற்றில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில், இடஒதுக்கீட்டின்படி, ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர். தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கும், விரைவில் நேர்காணல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. SRIRAM COACHING CENTRE - PULIANGUDI..

    CCSE - GR4 FULL MODEL TEST

    MODEL TEST -1
    MODEL TEST -2
    MODEL TEST - 3
    MODEL TEST - 4
    MODEL TEST - 5
    With OMR Sheet..
    Only 500rs..

    Booking Person Only..
    SENT THROUGH COURIER. .
    Cell : 86789 13626..

    SHARE YOUR FRIENDS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி