3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை: கிராமப்புறங்களில் விரைவில் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2018

3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை: கிராமப்புறங்களில் விரைவில் தொடக்கம்

ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விரைவில்"ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்பறை அமைக்கப்பட உள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல்கட்டமாக கிராமப்புறங்களில் 3 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.இந்த வகுப்பறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், அதேபோன்று அந்த வசதிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் பாடங்களை படிக்கவும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

இதற்காக ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் மற்றும் கணினி, இண்டர்நெட் இணைப்பு வசதிகள் அங்கு இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். இன்டர்நெட் இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவைஉடையதாக இருக்கும். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. not a computer staff but smart class running... is it possible?????

    ReplyDelete
    Replies
    1. Ada loosungala... Smart class ku enda computer science staff.. Computer operate pandrathuku kooda cs degree vanganuma??
      Cs padichutu IT field pogama inga vandhu polambittu

      Delete
  2. Ivangalukku ellame possible.edaum urupadiya pannamaataanga

    ReplyDelete
  3. Smart class வகுப்பு எடுக்க computer staff தேவை இல்லை.. கணினி இயக்க தெரிஞ்ச ஆசிரியர் போதும் ஏன் என்றால் smart class now implement for primary and Middle schools.primary teachers teach primary level subjects not computer oriented subjects.. Teachers who finished Bse BEd will handle computer subjects for the classes 11th and 12th. If computer subject implement in new curriculum then the computer teacher will appointment in lower class es...

    ReplyDelete
    Replies
    1. Mothalla primaty anf high school la subject teacher podrathuku vali pirakkattum. Aparam cs pakalam, avan avan tet passs pannitu vettiya irukan

      Delete
    2. Don't be a selfish... Cs um oru subject tha.. Computer mattum illaina inniku iruka technology lam kanama poirukum.. Neenga mattum govt job vanganumnu nenaikathinga. Neengalathu tet trb nu ellathukum chance iruku.. Engaluku entha option um illa.. Cs padichathutha nanga panna thappuna paravalla.. U don't worry about that.. Neenga engaluku support pannatiyum paravalla insult pannama irunga..

      Delete
  4. Any sg tr want mutual transfer from perambalur to kadalur dt

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி