50 கோடி ரூபாய் முறைகேடு.. தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் அரங்கேறும் வியாபம் பார்ட் 2 - விகடன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2018

50 கோடி ரூபாய் முறைகேடு.. தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் அரங்கேறும் வியாபம் பார்ட் 2 - விகடன்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வில் முறைகேடு செய்தவர்களைக் காப்பாற்றும் வேலையில் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மதிப்பெண் உள்ளீடு செய்ததில் மோசடி செய்தார் என்று கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிகாரவர்க்கத்தில் இருக்கும் விஐபிக்களைக் காப்பாற்றும் வேலையில் போலீஸ் ஈடுபடுகிறார்கள் என்றும் நம்பகத்தன்மையற்ற இந்த பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் இந்தத் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

தமிழக அரசின் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி, 2017 ஆகஸ்ட் 13-ம் தேதி நடத்தியது. 'தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம்; தேர்வு எழுதுவதற்கு நேரம் போதவில்லை' என்று தேர்வு நடந்த தினத்தன்றே புகார் தெரிவித்தனர். வினாத்தாள் கடினம் என்பதால் கட்-ஆப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இந்தத் தேர்வு முடிவுகள் 2017 நவம்பர் 7-ம் தேதி வெளியானபோது, மொத்தம் 190-க்கு ஏராளமானோர் 120 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தனர்.

தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் இத்தேர்வில் பாஸாகிவிட்டார்கள் என்ற புகாருக்கு இடையே, மிகப்பெரிய அளவில் ஏதோ முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்து, தேர்வெழுதிய மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜெகநாதனுக்குப் புகார் அனுப்பினர். அந்தக் கடிதத்தில், ''டி.ஆர்.பி. நடத்தும் ஒவ்வொரு போட்டித்தேர்வும் ஆண்டுக்கு ஆண்டு மிகவும் கடினமாகவே வினாத்தாள் செட் செய்யப்படுகிறது. அதுபோலவே கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வும் மிகவும் கடினமாவே இருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக கட்-ஆப் மதிப்பெண் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதைவைத்துப் பார்க்கும்போது, ஏதோ முறைகேடு நடந்திருப்பதை உணர முடிகிறது. டி.ஆர்.பி-யின் போட்டித்தேர்வுக்காகப் பல ஆண்டுகளாக அல்லும்பகலும் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடாதீர்கள்'' .

போட்டித்தேர்வுக்குப் பயிற்சியளிக்கும் வல்லுநர்கள், மாதிரி வினாத்தாள் தொடர்பான சில ஆதாரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேர்வு வாரியம், 'சான்றிதழ் சரிபார்ப்புக்கு' அழைக்கப்பட்டிருந்தவர்களின் விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்தது. அதில், முறைகேடு நடந்திருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து உண்மையை மூடிமறைக்காமல் முறைகேடுகளை ஒப்புக்கொண்டு, அந்தத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றது. விடைத்தாள்கள் மறுஆய்வின்போது கணிதத்தில் வெறும் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவருக்கு 115 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 55 மதிப்பெண் எடுத்த மற்றொருவருக்கு 120 மதிப்பெண்ணும் என மதிப்பெண்ணை அதிகமாக மாற்றிப் போட்டு இருப்பது கண்டறியப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 2000 பேரில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண், இதுபோன்று வேறுபாட்டுடன் மாற்றிப் போட்டிருந்தது தெரியவந்தது. ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடான இந்த மதிப்பெண் குளறுபடியால், ஒவ்வொரு பாடத்திற்குமான தரவரிசைப் பட்டியலில் ஆயிரம் இடங்களுக்கும் பின்னால் இருந்தவர்கள், முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர். இதனால், உண்மையாக அதிக மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவர்கள் விரிவுரையாளர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதையடுத்து, இந்தத் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் புதியதாகத் தயாரிக்கப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், மதிப்பெண் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் முறைகேடு தொடர்பாக, கால் டாக்ஸி டிரைவர் கணேஷ் என்பவரை கடந்த 28-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

முறைகேடு குறித்து புளியங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜலிங்கம், ''ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்தே போட்டித் தேர்வுகளை எழுதுகிறோம். ஆனால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக தற்போது மாணவர்களே பிடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். மதிப்பெண் உள்ளீடு செய்வதில் நடந்த முறைகேடுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் திணறுகிறது. தனியார் ஏஜென்ஸிதான் தவறு செய்தது போல இந்தப் பிரச்னையைக் கொண்டுசெல்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகள்தான், இந்த முறைகேடுகளுக்குக் காரணம். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் மதிப்பெண் உள்ளீடு செய்ததில் மட்டுமல்ல; விடைத்தாளிலேயும் திருத்தம் செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்.

இப்போது தேர்ச்சிபெற்றவர்கள் என்று தெரிவித்து 1:2 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த அனைவரின் விடைத்தாள்களையும் தடயவியல் சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரும். எனவே, நம்பகத்தன்மையை இழந்து இருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், தனது தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்று, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை புதியதாக வெளியிட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். இப்படி, விசாரணை என்று காலவிரயம் செய்வதைவிட புது அறிவிப்பாணை வெளியிட்டால் மூன்றே மாதத்தில் தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்துவிடலாம். இணையத்தில் வெளியிட்ட ஓ.எம்.ஆர்களை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண்ணோடு  ஒப்பிட்டுப்பார்க்க போதிய காலஅவகாசம் தரவில்லை. எனவே மீண்டும் அந்த ஓ.எம்.ஆர் ஷீட்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் சுனில்ராஜா, ''பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் முதல் முதலாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் கொடுத்தோம். அதன் தொடர்ச்சியாகவே கணேஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரு சாதாரண கால் டாக்‌ஸி டிரைவர் கணேஷ்குமார் மட்டும் செய்திருக்க முடியாது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கவனிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 'இது ஒரு சிறிய தவறு' என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். அவரின் இந்தப் பேட்டி, தேர்வு வாரிய மோசடி குறித்து, அவர் வெட்கப்பட்டதாகவோ, வேதனைப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட வேண்டும். இப்போது நடக்கும் போலீஸ் விசாரணையின் போக்கைப் பார்த்தால் யார், யாரையோ காப்பாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அதற்கு இடம் கொடுக்காமல், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து தேர்வு எழுதியவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் துணை நிற்க வேண்டும். ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாகச் சொல்லப்படும் இந்த பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பான உண்மைகளை சீக்கிரமே வெளியே கொண்டுவந்து குற்றவாளிகளைச் சட்டத்தின்முன்பு நிறுத்த வேண்டும். மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் முறைகேடு இந்தியாவையே உலுக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிராகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்கள் கொதித்து எழவேண்டும்'' என்றார்.

   பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னைகளில் என்ன நடக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இருக்கிறது.

77 comments:

  1. யாருய்யா இந்த ராஜலிங்கம்???

    அவன் அவன் வருஷ கணக்குல படிச்சிட்டு தேர்வு எழுதி select ஆகி இருக்கான்..

    இஷ்டத்துக்கு மறுதேர்வு கேட்கிற... இஞ்சினியரிங் trb syllabus எடுத்துப் பாரு.. 10 subj.. பிரிச்சிப் போட்டா.. 20 க்கும் மேல வரும் மொத்த subj..

    நாங்களே.. இருந்த வேலைய விட்டுட்டு.. வருஷக்கணக்குல படிச்சி.. போன trbல ஒரு mark ல வாய்ப்பை நழுவவிட்டு.. இப்போது நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியுள்ளோம்.. நீ போடுற bit னால.. 2019 வரைக்கும் இழுக்கும் போல... குறுக்கு வழியில் வந்தவரை கண்டுபிடித்து வெளியேற்றிவிட்டு எங்களுக்கு posting தர வேண்டும்...

    Polytech trb தேர்வு எழுதியவன் மறுதேர்வு கேட்டாலே.. செம கடுப்பாகுது.. இதில் dist education ல தமிழ் படிச்சிட்டு வெத்து விளம்பரத்திற்கு எதையாவது உளறாதே..

    ஏற்கனவே ஒழுங்காய்ப் படிக்காமல் வாய்பை நழுவ விட்ட நல்லவர்கள் மறுமுறை தேர்வு வைத்தால் படித்துவிட்டு வரமாட்டார்களா??

    இது எப்படித் தெரியுமா உள்ளது.. +2 ல நாங்க எல்லாம் ஒரு வருஷத்தில் படித்து தேர்வு எழுதுவோம்.. சிலருக்கு மட்டும் 2 ஆண்டுகள் படிக்க அனுமதிப்பது போல..

    TET, TNPSC, TRB போன்ற எல்லா தேர்வுகளிலும் நீ இதே வேலையாய்த் திரிவது அப்பட்டம்..

    Coaching centre ங்க கிட்ட ஏதாவது dealing ஆ??? திருப்பி தேர்வு வைத்தால் அதை வைத்து காசு பார்க்கும் எண்ணமோ??

    சம்மந்தம் இல்லாத இடத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்திவிட்டு.. regular ல படிச்சி.. ஒரு நல்ல வேலைக்கு போகும் வழியைப் பார்.. இப்படி எங்கள் எதிர்காலத்தில் விளையாட நினைக்காதே..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நல்ல காமெடி. .. உன் தேர்வு நம்பரை சொல்லு.. அப்புறம் படிச்சு வாங்கினியா இல்ல ஏஜென்சி புடிச்சு வாங்கினியானு பார்ப்போம்.. முறைகேடு எதிராக உச்சநீதிமன்றம் வரை செல்வேன். ..

      Delete
    3. Muthala nee thervu eluthinaiyaa nee padichathu BA Tamil. Unakum re exam kum enna sambantham.

      Delete
    4. நான் என் தேர்வு எண்ணை சொல்வது இருக்கட்டும்... நீங்க BA tamil காசு கொடுத்து pass பண்ணல னு நிரூபிங்க... இல்ல னா.. மொதல்ல இருந்து எல்லாத் தேர்வையும் எழுது.. அப்போது தான் நம்புவோம்..

      Delete
    5. E. Karthi ne mentala... தப்பை தட்டிக்கேட்க எல்லாருக்கும் இருக்கு. . என் படிப்பு என்னனு கூட தெரியாதா. ...

      Delete
    6. சில ஈனப்பிறவிக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை..

      Delete
    7. Dai ne ba tamil padicha university pera sonnaa nee eppadi eluthi irupaa nu ellarum therinjipaanga. 2013 la nee " oru aided school ku owner nu" poi sonnavanthaane. Athe maathiri saagum varai poraattam pannalaam nu kuupitu visatha nee kudikaama .unna nambi vanthavanga paavam avanga kudichitaanga.
      Thappa ellarum thatti ketkalaam.unna vilambara padutha complaint panna kuudaathu.2013 la Poraatam panren nu solli vasul seitha kaasuku kanaku ketaa odi olinthavan nee enna solriyaa. Kanaadiya paarda yaar yiina piravi nu theriyum.
      Dei first un exam no podu appuram mathavanga exam no kelu
      Intha visayatha vachi nalla kalla katta plan panni iruka poliruku

      Delete
    8. அதே 2 ஆண்டுகள் உனக்கு இல்லையா?.

      Delete
    9. Super ques... enakum 2 yrs iruku.. but normal ah one yr thaan time.. andha one yr la padichi mudichiten.. mark score panniten.. but.. avanunga 1 yr la padika mudiyala.. so.. 2 yrs time kodutha.. adhu thappu illaya..

      Next 1 yr la naan enna pannuven.. already padichadha thirupi padipen.. avlo thaan...

      Ippo oru exam la 3 hrs time.. neenga 3 hrs la complete pannidreenga.. but.. invigilator oru silaruku mattum 30 min extra kodutha.. neenga summa irupeengala..???

      Adhu maathiri thaan idhuvum... money mattume corruption illa.. indha maathiri.. fail ah ponavan ku favour ah time koduthu pafi raasa nu solradhum oru corruptiin thaan..

      Naanga nermaiya thaan sel3ct aanaom.. u can check us.. enna method use panni vena check pannikonga.. but.. we will protest against anything related to reexam..

      Delete
    10. மறு தேர்வுனு சொன்னா ஏன் பாஸ் ஆனவங்க எல்லாம் பயபடுரிங்க, ஏற்கனவே அவ்ளோ கஷ்டத்துல பாஸ் பண்ணியாச்சு, இனிமேல் ஒருவேளை retest வச்சா போன தடவ பெயில் ஆனவன் பாஸ் பண்ணிடுவானொன்னு பயப்படாம அவன விட நல்ல மார்க் வாங்குவேன்னு தைரியமா இருங்க, கண்டிப்பா retest வராது, ஒரு வேளை வந்தா இன்னும் ஒரு தடவ போராடுங்க எக்ஸாம்ல, கோர்ட்ல இல்ல,

      Delete
    11. ஒரு ஓட்டப் பந்தயத்தில்...

      பத்து நிமிடங்களில் ஓடி முடிப்பவர் யாவருக்கும் பரிசு என்றால்... எத்தனை முறை ஓட வைத்தாலும் பரிசு வாங்கலாம்..

      முதலில் வரும் 10 பேருக்கு மட்டுமே பரிசு என்றால்??
      ஒரு முறை பத்தாவதாக வரலாம்.. ஒருமுறை எட்டு.. இரண்டு.. ஒன்று..

      ஒரு வேளை பதினொன்றாக வந்தால்?? என் கதி...

      அப்போது என்ன சொல்வார்கள்.. நீ முதலில் ஓடி வெற்றி பெற்ற போதே பரிசு கேட்டு வாங்கி இருக்க வேண்டும்.. இப்படி இழந்து விட்டு நிற்கிறாயே.. வேலைக்கு ஆகாதவன்..

      Delete
    12. bayapadathinga boss hard work never fails.... hope for the best, seekirama govt polytechnic job vanga poring, kurichu vechukonga... kandavan podra case ellam pathu feel pannathinga

      Delete
    13. Please read and share to all groups.......

      அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம்- ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு : இன்றைய காலக் கட்டத்தில் இத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்ட பல்வேறு தவறுகளால் வீண் வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.சில தேர்வர்கள் மறு தேர்வு வேண்டும் என்ற கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து பல்வேறு பணிச்சூழல் ,குடும்பச்சூழல்களுக்கு இடையே இதற்காக நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து உண்மையாக தேர்வாகியுள்ளவர்களின் மன நிலையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.மீடியாக்களும் உண்மையாக தேர்வானவர்கள் பற்றி எக்கருத்தும் அவர்களின் நிலையை விளக்கும் வகையில் இது வரை வெளியிடவில்லை.சிலர் கூறுகின்றனர்.நீங்கள் நன்றாகப்படித்திருந்தால் மறு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் என்று கூறுகின்றனர்.என்னைப்பொறுத்தவரை மறுபடியும் படித்து வெற்றி பெறும் தன்னம்பிக்கை உள்ளது.ஆனால் உடல் ,மன நிலை , குடும்பச்சூழல் , பணிச்சூழல் இவைகளும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத சிலர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவர்.கடந்த தேர்விற்காக செலவிடப்பட்ட காலம் திரும்பக் கிடைக்குமா? மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது.எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம்.மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது , மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை.original OMR ம் பாதுகாப்பாக உள்ளது.இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன? மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள்.IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது ,மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீளவும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள்.மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள்.ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது.அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன்.இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா! ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே ,எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள்.நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும்.OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது.இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும்.தேர்வர்களே சிந்தித்து பாருங்கள்.அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது.ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள் .data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது.நீதியும் கூட.அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீளவும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம் .வீண் செயல்.இதற்கு கால நிலை , பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை.இதற்கிடையில் மன உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது.ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள்.இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பும் முடிக்கப்பட்டு பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் .நன்றி

      Delete
    14. Please read and share to all groups.......

    15. Please read and share to all groups.......

  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தம்பி நீ எவ்வளவு கொடுத்து செலக் ஆன

    ReplyDelete
    Replies
    1. ஆமா..select ஆனவன் எல்லாம் கெட்டவனா??.. நான் 2016 trb ல cvவரைக்கும் போய்ட்டு வந்தவன்.. cgpa 9+.. இப்போவும் select ஆகி இருக்கேன்.. தேவையில்லாம பேசாத.. குறுக்கு வழியில போகனும் அவசியமே இல்ல.. mind ur words

      Delete
    2. தம்பி ரொம்ப பொங்காத.... நீ யாருனு எனக்கு தெரியும்.. முறைகேடுகளை தட்டிக்கேட்டால் உனக்கு என்ன வலிக்குதா..

      Delete
    3. Mr.அறிவாளி.. முறைகேடுகளைத் தட்டிக் கேட்பது வலிக்கல.. நீ மறு தேர்வு னு சொல்றது தான் டா காண்டா இருக்கு.. ஒரு முறை தேர்வு எழுதிப் பார்.. பெருசா கூட வேணாம்.. just thermodynamics paper மட்டும் எழுதி pass ஆகிடு... நீ அதுக்கு அப்றம் இங்க வந்து ஆத்து..

      Delete
    4. பார் நடப்பதை விரைவில்...

      Delete
    5. Termodynamics book koduthu elutha sonna thaan eluthuvar. Eena ivar degree la edutha training appudi.

      Delete
    6. தேர்வில் தவறு நடந்துள்ளது அப்படி இருக்க ஏன் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கிடைத்திருக்க வாய்ப்பு இல்லையா...மறு தேர்வு தான் சரியான முடிவு.ராஜலிங்கம் சார் உங்களின் எல்லா நடவடிக்கைக்கும் நாங்கள் துணை இருப்போம்...

      Delete
    7. நீங்க விட்டா.. வினாத்தாள் எடுத்தவன் select ஆனவனுக்கு சித்தப்பா..

      வினாத்தாள் print ஆனது.. அவங்க ஊரு மாரியம்மன் printing press..
      என்று சொன்னாலும் சொல்வீர்கள்..

      Delete
    8. Madess sir absolutely correct...other than few all r selected in wrong way...re exam is the correct solution...

      Delete
  5. On behalf of the selected candidates (genuine) why don't we give interview to the media....The candidates who are not selected make this a big issue and provoking for reexam to get a second chance....If anybody has media links I'm ready to speak

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. We must take some initiative to represent our problems....

      Delete
    3. 👍👍👍👍

      Delete
    4. We have not done any mistakes....Y this is not highlighted...We should only take some steps

      Delete
  6. Everyday we are undergoing extreme pressure and agony which cannot be expressed in words.....Simply initiating for reexam.....What is the proof that omr has been inserted and answers have been manipulated....If omr had been inserted such scam wouldn't have exposed at all..... Without proper evidence how can they give such news for media against govt.

    ReplyDelete
  7. லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றும் மிகப்பெரும் மோசடிபாலிடெக்னிக் தேர்வில் TRB ல் நடந்துள்ளது இதனை எதிர்த்து எதிர்கட்சியான தி.மு.க ஏன் குரல்கொடுக்கவில்லை?ஒன்றும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் வரிந்து கட்டும் எதிர்கட்சிகள் இப்போது எங்கே போனார்கள்? ஒரு வகையில் இந்த மாதிரி இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? 2G வழக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்து அந்நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து சிபிஐ யை செயல்படாமல் வைத்து
    2G வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது போல் TRB முறைகேட்டையும் மூடி மறைத்து விடுவார்கள்.ஏனெனில் ஜாமீன் வழங்க மறுத்து சுமார் 17 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்க தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனகூறி 2G வழக்கை முடித்து வைத்தவர்கள் அல்லவா.தமிழகத்தில் TRB யும் கடைசியில் ஆதாரம் இல்லை இது கம்ப்யூட்டர் பிழை என்று வழக்கை முடித்துவிடுவார்கள்.எதிர் கட்சியினருக்கும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை... சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் ஒலிக்கும்....

      Delete
  8. ராஜலிங்கம் சார் போராடுங்கள் எத்தனைப் பேர் வேண்டும் நாங்கள் வருகிறோம்

    ReplyDelete
    Replies
    1. How can he represent the selected candidates...Has he got selected..Did he write the exam ....On what basis he s asking for reexam .....How can he speak on behalf of all the candidates

      Delete
    2. ராஜா சர் கண்டிப்பாக நான் வருவேன் உச்ச நீதிமன்ற வரை போராடுவோம் போராடுவோம் மறுத்தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் வரை

      Delete
  9. சட்டமன்ற கூட்டத்தொடரில் TRB முறைகேட்டையும் கொண்டு வந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. யாரு எப்படினா போகட்டும் நமக்கு கிடைச்சா போதும் என சில கேன பசங்களாலதான் இன்னும் லஞ்சம் ஒழியல

    ReplyDelete
    Replies
    1. Neenga kastappattu padichu CV varaikum genuine ah poi iruntha ippudi post poda mateenga

      Delete
    2. Reexam is the only solution for curtailing corruption ah.....How can u say this

      Delete
    3. தேர்வில் தவறு நடந்துள்ளது அப்படி இருக்க ஏன் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கிடைத்திருக்க வாய்ப்பு இல்லையா...மறு தேர்வு தான் சரியான முடிவு.ராஜலிங்கம் சார் உங்களின் எல்லா நடவடிக்கைக்கும் நாங்கள் துணை இருப்போம்...

      Delete
  11. There is a no problem to conduct reexam for polytechnic trb

    ReplyDelete
  12. Naanum CV kku poitu than vanthen

    ReplyDelete
  13. First let him tell how many subjects in this exam and which had problem with mark inflation. OMR carbon copy verify panna chance irukka why re exam. When this issue is with only selected subjects why others also to bother

    ReplyDelete
  14. Ennidam amount kettanga, kodukalana experience cut paniduvom nu sonnanga

    ReplyDelete
    Replies
    1. Engayaavadhu complaint panneengala???

      Idhe pozhapa thaan ellarum irukaanga.. result vandha odane.. corruption adhu idhu nu sollitu.. broker enaku call pannaan.. adha vachi thaan solrom nu.. call pannaan la.. ore oru complaint.. TRB ku or any IAS officer ku???

      Appo ellam summa irundhutu.. ippo perusa pesa vendiyadhu..

      Before result.. TRB received 0% complaint about these kind of brokers.. y??..

      Delete
    2. Naan last yr OBC cert vaanga VAO va approach pannen.. 300 rs kettaan.. naan RI kitta complaint pannen (becas RI nermaiyaana madam)..She warned him.. avlo thaan simple..

      Namaku edhavdhu aagidumo nu bayandhu pala peru idha pathi complaint pannaadha reason thaan ivlo periya pblm..

      Starting la ye.. oruthan trb chairman usha kitta complaint panni irundha.. indha cv list crct ah vandhu iruka vaaipu iruku

      Delete
  15. No one is worried to remove the culprits. Remove the culprits and publish genuine candidates list. Compare carbon copy of OMR and original and proceed legal action with culprits. How re-exam will be the solution for this issue when no issue with exam. It’s only two coaching centers propagating for re-exam for their benefits

    ReplyDelete
  16. What is the final solution for TRB corruption?

    ReplyDelete
  17. What is the final solution for TRB corruption?

    ReplyDelete
  18. The opposite political leaders have to raise their voice and also the media people have to raise their voice against this corruption... There is NO carbon copy only OMR IS AVALIBLE....SO U ALL THINK ....

    ReplyDelete
    Replies
    1. Exam ezhudhi irundha carbon copy nu onnu irukradhu therinji irukum..

      Delete
  19. In exam hall itself a copy of OMR is given to candidates. That s carbon copy only. And in Hall ticket itself it was mentioned to preserve the carbon copy till selection process is complete. Don’t think like Other OMR.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  20. Some one have file a case in the court to put an end for such type of corruption hereafter....at the same time the corrupted candidates have to be punished....so next time such corruption won't take place .... This must be done immediately....

    ReplyDelete
  21. Heard some saying that question paper was chased by some candidates....so it is large scam ...so all must be punished by the law ....

    ReplyDelete
  22. ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுட்டும்.
    நேர்மையாக தேர்வு எழுதி தேர்வான நண்பர்கள் யாரும் பாதிக்ககூடாது.
    No exam

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      இதை தான் நாங்களும் சொல்கிறோம்.. இவர்கள் காதில் விழவில்லையே!!!

      Delete
    2. Those done fraud with evidence were caught.others r escaped.cancel trb recruitment. Must take severe action upon all working in trb.without their knowledge there is no chance for corruption to happen.

      Delete
  23. மறு தேர்வு தான் சரியான முடிவு.ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுட்டும்.
    All candidates are genuine candidates except few(230+).
    We do not know how many times this types of scam happened .
    But here after even one time scam should not happened in TRB.

    ReplyDelete
  24. ஒரு தேர்வு பாஸ் பன்னுவது எவ்ளோ கஷ்டம்.....பாஸ் பன்னவங்களுக்கு வேலை கிடைத்தால் சரி......

    ReplyDelete
  25. ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.
    தற்போது Trb வெளியிட்டுள்ள தேர்வு முடிவு நேர்மையானது .

    ReplyDelete
  26. Trb தேர்வில் தேர்வாகாத நண்பர்கள்தான்
    தேர்வு வேண்டும் என்கிறார்கள்.
    அது எவ்வளவு பெரிய கோலைத்தனம்?????

    ReplyDelete
  27. தேர்வான நண்பர்கள் பணி வாய்ப்பு பெற எந்த எல்லைக்கும் போக தயாராக உள்ளார்கள்.அதை கவனித்தில் வைக்க வேண்டும்
    தேர்வானவர்கள் பணி வாய்ப்பு பெற என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நன்றி.....ஜயா

    ReplyDelete
  29. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம்- ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு : இன்றைய காலக் கட்டத்தில் இத்தேர்வு முடிவுகளில் வெளிப்பட்ட பல்வேறு தவறுகளால் வீண் வதந்திகள் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.சில தேர்வர்கள் மறு தேர்வு வேண்டும் என்ற கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து பல்வேறு பணிச்சூழல் ,குடும்பச்சூழல்களுக்கு இடையே இதற்காக நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து உண்மையாக தேர்வாகியுள்ளவர்களின் மன நிலையை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.மீடியாக்களும் உண்மையாக தேர்வானவர்கள் பற்றி எக்கருத்தும் அவர்களின் நிலையை விளக்கும் வகையில் இது வரை வெளியிடவில்லை.சிலர் கூறுகின்றனர்.நீங்கள் நன்றாகப்படித்திருந்தால் மறு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் என்று கூறுகின்றனர்.என்னைப்பொறுத்தவரை மறுபடியும் படித்து வெற்றி பெறும் தன்னம்பிக்கை உள்ளது.ஆனால் உடல் ,மன நிலை , குடும்பச்சூழல் , பணிச்சூழல் இவைகளும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத சிலர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவர்.கடந்த தேர்விற்காக செலவிடப்பட்ட காலம் திரும்பக் கிடைக்குமா? மறு தேர்வு வேண்டுபவர்கள் கூறுங்கள்.எங்களிடம் விடைத்தாளின் கார்பன் நகல் உள்ளது.எந்த விசாரணைக்கும் உண்மையாகப் படித்து தேர்வானவர்கள் தயாராக உள்ளோம்.மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உண்மைவிடைத்தாள் தேர்வு வாரியத்திடம் பாதுகாப்பாக உள்ளது , மதிப்பெண் data entry இல் மட்டுமே தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.தேர்வு நடந்த வரை எவ்வித தவறும் இல்லை.original OMR ம் பாதுகாப்பாக உள்ளது.இவ்வாறு இருக்கையில் மறு தேர்வு கோருவதன் அவசியம் என்ன? மறு தேர்வு கோருபவர்கள் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து விட்டு புதியதாக தேர்வு நடத்தச் சொல்லுங்கள்.IAS/ IPS உள்ளிட்ட பணிக்கு தேர்வானவர்களை அழைத்து உங்கள் தேர்வு ரத்து செய்யப்படுகிறது ,மறுபடியும் தேர்வு எழுதுங்கள் என்று கூறினால் எத்தனை பேர் மீளவும் தேர்வாக முடியும்.தயவு செய்து எங்கள் நிலைமையையும் யோசித்துப் பாருங்கள்.மீடியாக்களே எங்களைப் பாதிக்காத வண்ணம் எங்கள் கருத்துக்களையும் நிலையையும் தங்களின் மேலான செய்திகளில் வெளியீடு செய்யுங்கள்.ஏறக்குறைய தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது.அவ்வாறு சூழல் ஏற்பட்டால் மறுபடியும் படிக்க வேண்டும்.மறுதேர்வு கோரிக்கை என்பது உண்மையாக படித்து தேர்வாகியுள்ளவர்களுக்கு வழங்கக் கோரும் தண்டனையாகவே உணர்கின்றேன்.இந்த நாட்டில் உண்மைக்கு இது தான் முடிவா! ஆதலால் மறு தேர்வு கோருபவர்களே ,எங்கள் நிலையையும் உணர்ந்து பதிவு செய்யுங்கள்.நீங்கள்.நினைப்பது போல தவறு நிகழ்ந்திருந்தால் இரண்டாம் முறை தேர்வு முடிவுகள் எவ்வாறு அனைவருக்கும் சரியாக அமைந்திருக்கும்.OMR sheet உண்மையாக இருந்ததால் தான் உண்மை மதிப்பெண் வெளிவந்துள்ளது.இல்லையெனில் இரண்டாவது தேர்வு முடிவில் உண்மை மதிப்பெண் எப்படி வெளி வந்திருக்க முடியும்.தேர்வர்களே சிந்தித்து பாருங்கள்.அரசே இதை ஆய்வு செய்து உண்மைத் தேர்வர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் கூர்ந்தாய்வு செய்து இரண்டாவது முறை உண்மையான தேர்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டுள்ளது.ஆதலால் இதையும் கருத்தில் கொள்ளுங்கள் .data entry இல் மட்டுமே சில குற்றவாளிகளால் குற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குற்றங்களைக் களைந்து பிடுங்கி வெளியே வீசிவிட்டு பயிர்களை ( உண்மைத் தேர்வாளர்கள்) காப்பதே சிறந்தது.நீதியும் கூட.அதை விடுத்து களையுடன் பயிரையும் பிடுங்கி வெளியே எரிந்து மீளவும் நிலத்தைத் தயார்படுத்தி உழுது பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்பது கால விரையம் .வீண் செயல்.இதற்கு கால நிலை , பயிர் வளர அனைத்து சூழல்களும் தேவை.இதற்கிடையில் மன உடல் உளைச்சலில் உழவன் காலமாகிவிட்டால் இதற்கு யார் பொறுப்பேற்பது.ஆதலால் சிந்தித்து காலத்திற்கேற்ப தங்கள் கருத்துக்களை யாரும் பாதிக்கா வண்ணம் வெளிப்படுத்துங்கள்.இப்படிக்கு உண்மையில் படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பும் முடிக்கப்பட்டு பணிக்காகக் காத்திருக்கும் ட்டதாரி.நன்றி

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி