ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2018

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி புகைப்படம், பணியில் சேர்ந்த தேதி, பெயர், முகவரிஉள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை தயாரித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்து வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி முதல் அனைத்து வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது அணிய வேண்டும். அப்படி அடையாள அட்டை அணியாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

1 comment:

  1. எங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே அரசு வைத்திருந்து விட்டு இப்பொழுதாவது நமக்கு பணி கிடைக்கிறதே என்று பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனையோ பேர் இந்த 5000 த்துக்காகவும் இறங்கினோம். எங்களுக்கு 2 அல்லது 3 பள்ளிகள் என்று கூறிவிட்டு இந்த அரசு ஏமாற்றிவிட்டது. சம்பளமும் கால் வயிற்றுக்கு கூட போதாத நிலையில் வயது அதிகமாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரிவர திட்டமிட முடியாமலும் நாங்கள் நொந்து செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனியாரைவிட எங்களை ஸ்கீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் ஆசிரியர்களின் போராட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இருப்பது தெரிகிறது இவர்களுக்கு. மாணவர்களின் நலன் கருதி என்று பல்வேறு வேலைகளை வாங்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொற்ப சம்பளத்தில் படும் துயரம் எங்கே தெரியப்போகிறது? பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே! தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! ஆண்டுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்பளம் எங்களுக்கு ஏற்றப்பட்டதும் வெறும் 700 தான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி