ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை அரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி: என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2018

ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை அரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி: என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நடப்பாண்டு என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்வியியல் (பி.எட்,எம்.எட்) கல்லூரிகள், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.சென்னை சைதாப்பேட்டை, சென்னை லேடி வெலிங்டன், நாமக்கல் குமாரபாளையம், வேலூர், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஒரத்தநாடு உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் திருச்சி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்தில் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் புதிதாக கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, தேசிய கல்வியியில் கழகத்தின் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. என்சிடிஇ விதிப்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 12 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20க்கும் குறைவான பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 85 சதவீத இடங்கள் காலியாக உள்ள நிலையில், கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே நீண்டகாலமாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிஎட் படிப்பு காலம் 2 வருடமாக உயர்த்தப்பட்டது.

அதன்படி பார்க்கும்போது, பேராசிரியர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக்க வேண்டும்.இது ஒருபுறம் இருக்க, ஒரு கல்லூரியில் கூட நிரந்தர முதல்வர் இல்லை. பேராசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, கல்வி உபகரணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தான் என்சிடிஇ அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், தமிழக கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை புதிய நியமனங்களுக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. mothalla moodunga pa.... posting podrathuku exam vaika sonna kasu vangittu irukanunga

    ReplyDelete
  3. Even private college also no permanent staff ( sufficient staff ) school staff, arts college staff , and engineering college staff name are using to get approval order , most of the college working in part time mode only , who can going to take the step everything is smoothly going with some adjustment only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி