Amazon கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2018

Amazon கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


தற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விற்பனை மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25,000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் கிரேட் இந்தியன் சேல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வரிசையில் ஸ்மார்ட்போன் உட்பட பல மின்சாதன பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


அமேசான் கிரேட் இந்தியன் சேல் பொறுத்தவரை ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறும். மேலும் சியோமி நிறுவனத்தின் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகைகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
 

சியோமி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை1 கோல்டு (32ஜிபி), ரெட்மி வை1 லைட் (16ஜிபி), ரெட்மி 4(16ஜிபி), போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சாம்சங்:
சாம்சங் ஆன் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஜெ5 (16 ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு ரூ.2300-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,690-க்கு விற்பனை செய்ப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7210-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.20,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

ஹானர் வியூ 10 :
ஹானர் நிறுவனத்தின் அட்டகாசமான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் 29,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 

ஹானர் 6எக்ஸ் மற்றும் ஹானர் 8:
ஹானர் 8, ஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் முறையே ரூ.17,000, ரூ.5000, ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆப்பிள் ஐபோன்:
ஆப்பிள் ஐபோன் 6 (32ஜிபி) மாடலுக்கு ரூ.4,510-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் 8 (64ஜிபி) மாடலுக்கு ரூ.9,001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஐபோன் எஸ்இ மாடலுக்கு ரூ.7,003-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.18,997-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு ரூ.4001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.84,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

எல்ஜி :
எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வரிசையில் எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன்
மாடலுக்கு ரூ.15,010- விலைகுறைக்கப்பட்டு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி