மாணவர்கள் புதிய வகை செயற்கைகோள் உருவாக்கினால்இலவசமாக விண்ணில் செலுத்த நடவடிக்கை : மயில்சாமி அண்ணாதுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2018

மாணவர்கள் புதிய வகை செயற்கைகோள் உருவாக்கினால்இலவசமாக விண்ணில் செலுத்த நடவடிக்கை : மயில்சாமி அண்ணாதுரை

கல்லூரி மாணவர்கள் புதிய வகை மற்றும் எடை குறைந்த செயற்கைகோள் உருவாக்கினால் அதனை இஸ்ரோ மூலம் இலவசமாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மங்கல்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா் இவ்வாறு தெரிவித்தார். .மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோள்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இளம் விஞ்ஞானிகள், படிக்கும் காலத்திலேயே செயற்கைகோள் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாள வேண்டும் என மயில்சாமி கேட்டுக் கொண்டார். திரும்ப திரும்ப செய்யும் செயற்கைகோள்களை தாண்டி புதிதாக யோசித்து மாறுப்பட்ட உத்திகளில் செயற்கைகோள்களை தயாரிக்க முடியுமா என்ற கோணத்தில் இளம் விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும் என்றார்.

நிலநடுக்கம், சுனாமி வருவது குறித்து முன்கூட்டியே கணிக்க முடியுமா என்ற ரீதியிலும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருவது போல சூரியனையும் ஆய்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி