மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் தொடரும்: தகுதியுள்ளவர்கள் யார்?- தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2018

மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் தொடரும்: தகுதியுள்ளவர்கள் யார்?- தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்குவழங்கப்பட்டு வரும் இலவச பஸ் பாஸ் திட்டம் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டையை தொடர்ந்து வழங்குவது குறித்து போக்குவரத்து துறையின் செய்தி குறிப்பு:

மாணவர்களின் நலனைக் கருதி, தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (10+2) வரையிலும், அரசு கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பயண அட்டையை வழங்கி வருகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பழைய பேருந்து கட்டண அடிப்படையில், 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது.

பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான சலுகை

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் (அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்) 100 சதவீத இலவச பயண சலுகையின் மூலம் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை,பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.

அரசு கல்லூரி மாணவர்களுக்கான சலுகை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 சதவீத இலவச பயண சலுகையின் மூலம் முறையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 2,13,810, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 35,921, அரசு தொழிற்பயிற்சிநிலையங்களில் (ஐடிஐ) கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 28,348 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.தனியார் கல்லூரி மாணவர்களுக்கான சலுகைதனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 3.21 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையுடன் கூடிய பயண அட்டைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்.ரூ.590 கோடி மானியம்மேற்படி மாணாக்கர்ளுக்கான பயண அட்டைகளை வழங்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு 2017-18-ஆம் ஆண்டில் ரூ.540.99 கோடியினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

498 கூடுதல் பேருந்துகள்

இதைத்தவிர, பொதுமக்களுக்கு எழும் சிரமங்களைகருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே இருந்த சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளுடன், கூடுதலாக, 498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளை சாதாரண மற்றும்விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றியமைத்துள்ளது.”இவ்வாறு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி