அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில்மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2018

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில்மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மெரூன் நிற கால் சட்டை - வெளிர் சந்தன நிறச் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் ஸ்கர்ட்- சட்டையும் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற கால்சட்டையும், மாணவிகளுக்கு பச்சை நிற சுடிதாரும் சீருடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகளை அரசே வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சீருடைத் துணி உற்பத்திக்கான நூல் ஒப்பந்தப் புள்ளி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் கைத்தறி, துணிநூல் துறை மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிகழாண்டில் சீருடைத் துணி உற்பத்தி, விநியோகப் பணிகள் தாமதமாகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து துணிநூல் துறையினர் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்து அரசு அறிவித்துள்ளது.

 இந்தச் சீருடைகள் உற்பத்திப் பணியை 125 நாள்களுக்குள் (மே மாதத்துக்குள்) முடித்து சமூகநலத்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் பள்ளிக் கல்வித் துறை மூலம் சீருடைகள் விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 2 ஜோடி சீருடையும், அடுத்த இரண்டு மாதங்களில் தலா ஒரு ஜோடி சீருடையும் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி