கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2018

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.

ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 600 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??

எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??                                                      
G. RAJKUMAR, MCA., BEd.,
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
 பதிவு எண் ® 655/2014.

33 comments:

  1. அரசுத் துறையில் வேலை செய்யும் அனைத்து அரசு உழியர்களும்
    (இந்தியாவின் முதன்மை குடிமகனும் முன் அரசு ஊழியருமான குடியரசுத் தலைவர் முதல் ........ கடைநிலை அரசு ஊழியரான clerkவரையும்
    மற்றும்
    அனைத்து மாநிலத்தின் முதல் தலைமகனான ஆளுநர் முதல் ...... கடைநிலை ஊழியரான மாநகராட்சி ஊழியர் வரை)
    அரசுத் துறையில் உள்ள அனைவரும், அனைத்து தரப்புமக்களின் வரிப் பணத்தை சம்பளமாக பெருகின்றார்கள்.
    மேற்கூரிய அனைத்து அரசு ஊழியர்களும் தங்களின் உண்மையான சொத்து விவரங்களை ஒவ்வொரு வருடமும் முறையாக சமர்ப்பித்தால் தான் மாதச் சம்பளம் முழுமையும் கிடைக்கும் என்ற ஒரு சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது???????????
    அப்படி தங்களின் வருமானத்தை விட அதிகமாக சொத்துக்களை அரசு பரி முதல் செய்து நாட்டிற்கு மக்களலுக்கும் அடிப்படை வசதிகளை இலவசமாக (உணவு 1 உறைவிடம் | சுகாதாரம் ) ஏற்படுத்தி தரவும் |நலத்திட் டங்களை செயல்படுத்தவும் அதை பயன்படுத்த வேண்டும்.
    அடுத்து அடுத்து இதனை சினிமாத்துறை, மருத்துவம் 1 வணிகம் | ஆன்மிகம்..... இப்படி எல்லாத் துறையிலும் அனைவரும் ஒவ்வொடு வருடமும் சொத்து விவரத்தை update செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
      முக்கிய அறிவிப்பு:

      எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
      முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

      எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

      எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
      அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
      அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
      எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
      எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

      நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
      களத்தில் இறங்குபவர்கள்.....

      மாநில ஒருங்கிணைப்பாளர்
      ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

      Delete
    2. 2013 டெட் தேர்வர்கள் கவனத்திற்கு என்னுடைய பெயரில் கல்வி செய்தியில் உலா வரும் அனைத்து பதிவுகளும் பொய்யானவை...நானும் நண்பர் நாகூர் மீராவும் உயிர் நண்பர்கள்... எங்களுக்கு வேண்டாத சில விஷமிகள் பதிவிடும் கருத்திற்கு நான் ஒருபோதும் பதில் அளித்து என் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை...நாங்கள் கமன்ட் கொடுப்பவர்கள் அல்ல களத்தில் இறங்கி போராடுபவர்கள்.என்னை பற்றி 2013 நண்பர்களுக்கு நன்கு தெரியும்...எங்களுக்கு எதிராக எது வந்தாலும் சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்...தொடர்ந்து என் போராட்டம் சூடு பிடிக்கும் அதி தீவிரமாக...நன்றி!இப்படிக்கு - வடிவேல் சுந்தர் (மாநில தலைவர்)2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நான் இனிமேல் போராட தயாரில்லை ஏனெனில் எனக்கு எந்த அடிப்படையில் போட்டாலும் எனக்கு வராது ஆகவே நான் படிக்க போறோன்... இனியும் அமைச்சரை நம்ப வேண்டாம் தோழர்களே.. நான் அடுத்த குழுவாக படிப்போம் 2018 டெட் வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. நல்ல முடிவு தோழரே... வரவேற்கிறேன்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சிறந்த முடிவு அன்பரே...

      Delete
    4. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
      முக்கிய அறிவிப்பு:

      எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
      முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

      எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

      எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
      அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
      அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
      எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
      எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

      நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
      களத்தில் இறங்குபவர்கள்.....

      மாநில ஒருங்கிணைப்பாளர்
      ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

      Delete
  4. 2013 தேர்வர்களுக்கு என் கோரிக்கை..

    நமக்கு எதிராக முடிவு வந்தால் நாம் 2018 டெட்டுக்கு படிக்க தயாராக இருப்போம் தேர்வர்களே.. தயாராக இருங்கள்..

    ReplyDelete
  5. நம் திறமையை நிருபிப்போம... அதே நேரத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்

    ReplyDelete
  6. புதிய பாடத்திட்டதில் கணினி சம்மந்தமான பாடதிட்டம் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக SCERT கூறி இருந்தது. ஆனால் புதிய வரைவு பாடத்திட்டதில் கணினி சார்ந்த பாடங்கள் அறிமுகம் செய்யவில்லை. தற்போது SCERT புதிய பாடத்திட்டதில் கணினி பாடம் சேர்ப்பது அரசு கொள்கை முடிவு என்று கூறுகிறது. தமிழக மக்கள் அனைவரையும் SCERT ஏமாற்றுகின்றது. புதிய பாடதிட்டதில் கணினி பாடங்கள் சேர்க்க எடுத்த நடவடிக்கை பின்பு எப்படி அரசு கொள்கை முடிவாகும். அரசு முடிவு செய்த பின்பு தானே SCERT முயற்சிகள் மேற்கொண்டு இருக்கும். கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்வது மற்றும் 765 காலி கணினி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புவது பற்றி அரசு எந்த ஒரு தெளிவான முடிவும் இதுவரை எடுக்கவில்லை. வெறும் வாய் வார்த்தைகளாகவே உள்ளன. இவ்வாறு இருக்கும் பள்ளிக்கல்வி துறை CBSE க்கு இணையான பாடத்திட்டம் பாடத்திட்டம் என கூறிகொள்வது மிகவும் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  7. எங்கள் குழுவில் உள்ள நாகூர் மீரான் என்பவரே தவறான வழிகாட்டுதலில் செயல்படுகிறார். அவரை யாரும் நம்ப வேண்டாம்.. நாம் தொடர்ந்து அமைச்சரை சந்திப்போம் அடுத்தகட்ட இலக்கு 50:50 கேட்போம் தரவில்லை எனில் நாம் அடுத்த டெட் 2018க்கு படிப்போம் நண்பர்களே..
    நாகூர் மீரான் நம்குழுவில் இருந்து நீக்கப் படுகிறார்.. நம் டெட் போராட்டக்குழுவின் பணத்தை அவர் கையாடல் பண்ணியதை கண்டுபிடித்தோம்..ஆகவே அவருடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம்.. அவர் நம்பர் 9791232259

    ReplyDelete
    Replies
    1. 2012 :20, 2013:20, 2014:20, 2017:20, 2018:20 RATIO என்ற முறையில் கேளுங்கள்

      Delete
    2. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
      முக்கிய அறிவிப்பு:

      எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
      முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

      எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

      எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
      அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
      அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
      எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
      எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

      நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
      களத்தில் இறங்குபவர்கள்.....

      மாநில ஒருங்கிணைப்பாளர்
      ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

      Delete
    3. இளங்கோவன் அவர்களே எனக்கு நாகூர் மீரான் மீது நம்பிக்கை இல்லை நமது வசூல் பணத்தை அவர் கையாடல் செய்து விட்டார் எனவே அவரை நீக்குங்கள் இல்லையேல் நான் கூட்டமைப்பை விட்டு வெளியே போகிறேன்.

      Delete
  8. 50000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் வேலையின்றி உள்ளதாக கூறியதற்கு நன்றி.

    ReplyDelete
  9. Vadivelu sir yesterday news fake ka appo 2017than process poitu irukka

    ReplyDelete
  10. தந்தி tv இல் நேற்று 50%-50% entru vantha news poiya sir?

    ReplyDelete
  11. தந்தி tv இல் நேற்று 50%-50% entru vantha news poiya sir?

    ReplyDelete
    Replies
    1. தந்தி டிவியில் திரித்து கூறப்பட்ட செய்தி..

      Delete
    2. Prakash tell me ur contact number

      Delete
  12. நேற்றைய தந்தி டிவி வீடியோவில் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதை கல்விச்செய்தி admin நண்பர் சரியாக கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் 2013நண்பர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றால் குழு அறிக்கை சமர்ப்பித்த மறுநாள் கூட தெரிவு பட்டியல் வெளியிட்டு இருக்கலாம்.காரணம் 2013 நண்பர்களின் தரவரிசை பட்டியல் ஏற்கனவே அவர்களிடம் உள்ளது. எனவே தவறான வழிகாட்டுதல்களால் கால விரயம் செய்யாமல் வரும் தேர்வுகளுக்கு படிப்பதே உத்தமம்.
    நாம் அனைவரும் சந்தேகிக்கும் ஒன்று, இப்போது பணி நியமனம் செய்வார்களா இல்லை 2018 தேர்வு முடித்து சேர்த்து பணி நியமனம் செய்வார்களா என்று..!! அதற்கும் பதில் அளிப்பது போல் KA.செங் அவர்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் நியமனம் என்றார்..எனவே அந்த செய்தி உண்மையாக வேண்டும் என்று நம்புவோம். மற்றொன்று P1 நிலைமை! P2 ன் தரவரிசை பட்டியல் வரும்போது P1 க்கு CV அழைப்பு வர வேண்டும். தவறும் பட்சத்தில் P1க்கு நியமனம் தாமதமாக வாய்ப்புண்டு.
    நன்றி வணக்கம்...

    ReplyDelete
    Replies
    1. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
      முக்கிய அறிவிப்பு:

      எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
      முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

      எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

      எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
      அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
      அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
      எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
      எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

      நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
      களத்தில் இறங்குபவர்கள்.....

      மாநில ஒருங்கிணைப்பாளர்
      ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

      Delete
    2. இளங்கோவன் அவர்களே எனக்கு நாகூர் மீரான் மீது நம்பிக்கை இல்லை நமது வசூல் பணத்தை அவர் கையாடல் செய்து விட்டார் எனவே அவரை நீக்குங்கள் இல்லையேல் நான் கூட்டமைப்பை விட்டு வெளியே போகிறேன்.

      Delete
    3. 2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
      முக்கிய அறிவிப்பு:

      எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
      முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.

      எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.

      எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
      அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
      அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
      எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
      எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.

      நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
      களத்தில் இறங்குபவர்கள்.....

      மாநில ஒருங்கிணைப்பாளர்
      ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp

      Delete
    4. மேலும் எனக்கு எந்த முறையில் போட்டாலும் வராது.. ஆகவே நான் அடுத்த தேர்வுக்கு என் குழுவை தயாராக்க போகிறேன் இனி எதற்கும் என்னை அழைக்காதீர்கள் தயவுசெய்து போதும்.. உங்களுடன் சேர்ந்து இந்த அளவுக்கு அசிங்கப்பட்டது.. நாகூர் மீரானை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுங்கள்

      Delete
  13. இளங்கோவன் அவர்களே எனக்கு நாகூர் மீரான் மீது நம்பிக்கை இல்லை நமது வசூல் பணத்தை அவர் கையாடல் செய்து விட்டார் எனவே அவரை நீக்குங்கள் இல்லையேல் நான் கூட்டமைப்பை விட்டு வெளியே போகிறேன்.

    ReplyDelete
  14. மேலும் எனக்கு எந்த முறையில் போட்டாலும் வராது.. ஆகவே நான் அடுத்த தேர்வுக்கு என் குழுவை தயாராக்க போகிறேன் இனி எதற்கும் என்னை அழைக்காதீர்கள் தயவுசெய்து போதும்.. உங்களுடன் சேர்ந்து இந்த அளவுக்கு அசிங்கப்பட்டது.. நாகூர் மீரானை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுங்கள்

    ReplyDelete
  15. இது எங்கள் அண்ணன் வடிவேல் சுந்தர் அவர்கள் கூறியது இல்லை அதே சமயம் எங்கள் கூட்டாமைப்பின் பொருளார் நாகூர் மீரான் அவர்கள் இல்லை எங்களின் பணத்தை அவர் கையாள்வதில்லை இது வேண்டும் என்றே பொய்யாக பரப்பபடுகிறது தயவுசெய்து அட்மின் அவர்கள் எங்கள் அண்ணன் வடிவேல் அவர்களின் பெயரில் வரும் செய்திகளை நீக்கு வேண்டும்

    ReplyDelete
  16. Posting kidaikkum varsity poraduvom computer teacher

    ReplyDelete
  17. 7 வருடமாக ஒன்றும் செய்யவில்லை இந்த அரசுன்னு சொல்லுற நிங்க ஏன் 7 தேதி கல்வி அமைச்சர்கு பாராட்டுவிழா எடுத்திங்க. அமைசர் வராத நிகழ்ச்சிக்கு அவரை மின் வைத்து பாராட்டு விழா எடுக்க உங்களை தவிர யாராலையும் முடியாது.........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி