பாலிடெக்னிக்: தேர்ச்சி பெறாதோர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2018

பாலிடெக்னிக்: தேர்ச்சி பெறாதோர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வு எழுததொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் வருகிற ஏப்ரல்மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதனுடன் மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ. 30, பதிவுக் கட்டணம் ரூ. 25 கட்டணங்களையும் சேர்த்து மாணவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாகச் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு தேர்வுக்குப் பதிவு செய்ய பிப்ரவரி 7 கடைசி நாளாகும். அபராதத் தொகை ரூ. 100 செலுத்தி, பிப்ரவரி 14 வரை தேர்வுக்குப் பதிவு செய்யலாம்.அதன் பிறகு, தட்கல் முறையில் ரூ. 500 அபராதம் செலுத்தி மார்ச் 9-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி