மாநில பாடதிட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு : மத்திய அரசு பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2018

மாநில பாடதிட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு : மத்திய அரசு பரிசீலனை

மாநில அரசுகளின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
முதல் ஆண்டில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. தற்போது வரை நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் பல மாநிலங்களில் வித்தியாசப்படுகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இன்று நீட் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாநில பாடத்திட்டங்களையும் பரிசீலித்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்பது பின்னடைவாக இருக்காது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், எந்த மாநில மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க முடியும் என்றார்.

மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்  மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை  வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என  நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. பல்வேறு பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களை குழப்பவேண்டாம்.. மாநில பாடத்திட்டத்தை மட்டும் கொண்டு கேள்வித்தாளை அமைத்தாலே போதுமானது.. மிக சிறந்ததும் கூட... நன்றி..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி