பட்ஜெட்டில் வருமான வரி ரத்தாகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2018

பட்ஜெட்டில் வருமான வரி ரத்தாகுமா?

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பாஜக கட்சியைச் சேர்ந்த பலர் தனிநபர் வருமான வரிச் செலுத்தும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்த்கிராந்தி அமைப்பின் நிறுவனரும் பொருளாதார நிபுணருமான அனில் போகில் உள்ளிட்ட பலர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் (2018-19) அறிக்கையில் வருமான வரி நடைமுறையை நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அனில் போகில் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது தொடர்பான அவரது பரிந்துரை ஏற்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல, வருமான வரியை நீக்கிவிட்டு, ஒற்றை வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா கருத்துத்தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்களில் அதிகம் வசதி படைத்தவர்களே பெரும்பாலும் வருமான வரிச் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்களும் வருமான வரிச் செலுத்தாமல் தவிர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளைக் கையிலெடுக்கின்றனர். வருமான வரியை ரத்து செய்தால் அதன் வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்படும் நலத்திட்ட உதவிகளில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி