மன அழுத்தத்தைப் போக்க பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி, கவுன்சலிங்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2018

மன அழுத்தத்தைப் போக்க பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி, கவுன்சலிங்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க கவுன்சலிங், யோகா பயிற்சி வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி மாணவர் சுரேந்தர் மரணம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்தலைமையில், செயலர் பிரதீப் யாதவ், கல்வித் துறை இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது. இக்கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன்கூறியதாவது:டான்போஸ்கோ பள்ளி மாணவர் மரணம் தொடர்பாக, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எங்கள் கவனத்துக்கு வரும் சிறு, சிறு தவறுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறி வுரைகள் வழங்கப்படுகின்றன.மாணவர்கள் - ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். இளகிய மனம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர் மீதான பயத்தில் திடீரென தேவையற்ற முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது.

அத்தகைய மாணவர்களுக்கு எப்படி அறிவுரை வழங்கவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உளவியல் ஆலோசகர் மூலம் கவுன்சலிங் வழங்கப்படும். விருப்பப்பட்டால் யோகா பயிற்சியும் அளிக்கப்படும். அது கட்டாயம் அல்ல. கவுன்சலிங், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.படிப்பு, மதிப்பெண் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துவதால், மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் உடல் திறன் மேம்பாட்டுக்கு பள்ளிகளில் விளையாட்டுகள் கற்றுத் தரப்படும்.

இட வசதிக்கேற்ப கபடி, ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளைக் கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறோம். மாணவர்கள் உடல் வலிமை பெற்றால், எதையும் சந்திக்கும் திறன் வந்துவிடும்.தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆசையில், பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். அங்கு கூடுதல் பயிற்சி, நேரம் தவறாமையை கடைபிடிப்பது போன்றவற்றால் சிறு குறைபாடுகள் நடக்கின்றன.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் குறைவு. இங்கு மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. அவர்கள் எந்த இடையூறும் இன்றி பள்ளிக்கு வந்து செல்ல அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.எனவேதான், கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி