உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை-சென்னை இடையே விரைவில் விமான சேவை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2018

உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை-சென்னை இடையே விரைவில் விமான சேவை தொடக்கம்

விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் உதான் திட்டம் ஆகும்.
உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும். 2017 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி உதான் திட்டத்தைப் பிரதமர் மோடி  ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மலை பிரதேசத்தில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். உதான் திட்டத்தின் மூலம் முதலில் சிம்லா-டெல்லி, கடப்பா-ஐதராபாத் மற்றும் நந்தேட்-ஐதராபாத் வழித்தடங்களில் விமானச் சேவை துவங்கப்பட்டது.

1 மணி நேர விமானப் பயணம் அல்லது 500 கிமி தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமானச் சேவை அளிப்பதினால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை - சென்னை இடையே விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தஞ்சை விமானப்படை தளத்திலிருந்து சென்னை விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சையில் முதன் முறையாக விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. மேலும், உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஓசூர், சேலம், நெய்வேலியில் விமான சேவையைத் தொடங்குவதற்காக மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி