லண்டன் தரத்தில் பயிற்சி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

லண்டன் தரத்தில் பயிற்சி!!!

கற்றல் குறைபாடுகள் உள்ளகுழந்தைகளுக்கு லண்டனில் உள்ளது போல் தமிழகத்திலும்பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் பிப்ரவரி மாதம் முதல் அரசு நூலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 314 முழுநேர நூலகங்கள் 2 கோடி ரூபாய் செலவில் கணினிமயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் பாரியூரில் இன்று (ஜனவரி 14) தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,"தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இம்மாத இறுதிக்குள் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி முகாம்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு லண்டனில் உள்ளது போல் தமிழகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 comment:

  1. Mr. Senkottaiyan minister avargale first Teacher vacant fill pannunga. Basement correcta erunthathan building stronga erukkum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி